உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நினைவு அலைகள் மூலநூலைப் படிக்காமல், குறிப்புகளைப் படிக்கும் குறுக்கு வழிக்குப் பழக்கப்பட்ட மக்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. - ஒரு காலத்தில் அச்சிட்ட குறிப்புகளை மாணவர்களிடம் கண்டால், ஆசிரியர்கள் எரிச்சல் கொள்வார்கள். அவற்றைப் படிக்காதீர்கள் என்றார்கள் மெல்ல மெல்ல இப்போது அது மாறிப் போய்விட்டது. இப்போது, வகுப்பு ஆசிரியர்களே இன்ன குறிப்பை வாங்கிப் படியுங்கள் என்று பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறார்கள் பல இடங்களில் கட்டாயப்படுத்துகிறார்கள். எந்தப் பாடத்தையும் மூலநூலில் இருந்து படிக்காத மக்களின் தரத்தை உயர்த்துவது பற்றிப் பேசுவது, கிண்டலுக்கு ஒப்பாகும்: வேதனையூட்டும். அவசரக் கோலம் புகுமுக வகுப்பைப் புகுத்தியதைக் கவனிப்போம். சென்னைப் பல்கலைக் கழகம் சுறுசுறுப்பாக இயங்கிற்று. ஒராண்டுப் பாடத் திட்டங்களை வகுத்தது; பெற வேண்டிய ஒப்புதல்களைப் பெற்றது. நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய Ј, ГТ al) அட்டவணையை அறிவித்தது. ■ ஒராண்டு ஒடிவிடுமே! மூன்றாண்டு பட்டப் படிப்புக்கும் விரைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாடநூலை எழுதும் பேராசிரியர்கள் தேனி.க்களாகச் செயல்பட்டனர். அதிகப்படியான இடம், தளவாடங்கள், துணைக் கருவிகள் தேவைப்பட்டன. --- பல கோடி ரூபாய் அதற்கு நிதி எங்கே? அரசு நிதிதான். பல்கலைக் கழக மான்யக் குழுவின் வாயிலாகவே, கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நிதி உதவி பெற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/239&oldid=788024" இலிருந்து மீள்விக்கப்பட்டது