உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 201 டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரின் செல்வாக்கும் தொடர்பும் நிதி உதவி மடை திறக்க உதவின. மூன்றாண்டு பட்டப் படிப்பு, தேசியக் கொள்கை. இதை நிறைவேற்றுவது மான்யக் குழுவின் பொறுப்பு. அதற்கு இதோ நிதி. 'இன்ன அளவில் உதவி என்று திட்டம் போடப்பட்டது. உடனடித் தேவையில்லாத, நாடு' தழுவிய சீரழிவுத் திட்டத்திற்குச் சில நூறு கோடி ரூபாய்களைச் செலவிட்டு, 2+2 என்று இருந்ததை 1+3 என்று சாதித்துக் காட்டினார்கள். சட்ட மன்றத்தில் இப்படி ஏழைகளின் பணத்தைப் பாழாக்குவதற்கு முன்பு - புகுமுக வகுப்பு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் - கல்வி அமைச்சர் கனம் சி. சுப்பிரமணியம் சென்னை சட்டமன்ற மேலவையில் கல்வி நிதி ஒதுக்கீடு வாதத்தின்போது, "புகுமுக வகுப்புத் திட்டத்தைக் கொண்டுவராமல், ஒராண்டிற்குத் தள்ளிப் போடுங்கள். “மற்ற மாநிலங்கள் மாற்றும்போது நாமும் மாற்றுவோம். இவ் வேண்டுகோளை இந்த அவையில் சிறந்து விளங்கும் துணைவேந்தருக்கு விடுக்கிறேன்” என்றார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் என்ன சொன்னார்? “கல்வி அமைச்சரின் வேண்டுகோளைப் பல்கலைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக”ப் பதில் கூறினார். பட்டும் படாமலும் சொன்ன பதிலின் தன்மையை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டவர்கள் பலர். அடுத்து ஆட்சிக்குழுக் கூட்டத்தில் துணைவேந்தரின் மேலவைப் பதிலைப் பற்றி ஒருவர் குறிப்பிடடார். 'முடிவு செய்யும் அதிகாரம் என்னுடையது அல்ல பல்கலைக் கழகத்திற்கே உண்டு. எனவே, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் கூறினேன். அது உறுதிமொழியல்ல. மாற்றுகிறேன். என்ற வாக்குறுதியும் அல்ல” என்று துணைவேந்தர் விளக்கினார். "ஏற்கெனவே எல்ல்ா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால், புகுமுக வகுப்புத் திட்டத்தைத் தள்ளிப்போட வேண்டாம்” என்று பலர் பேசினார்கள். பழைய முடிவே உறுதிப்படுத்தப்பட்டது. இது தேவையற்ற கலைப்பு: வீண் செலவு: குழப்பம். அதன் துணை விளைவு பெருந்தீங்காகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/240&oldid=788025" இலிருந்து மீள்விக்கப்பட்டது