உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நினைவு அலைகள் இளங்கலை சிறப்பு வகுப்பின் BA (Honours) மாண்பு புகுமுக வகுப்பு வருவதற்கு முன்பு, இளங்கலைப் படிப்பில் இளங்கலை - இளங்கலைச் சிறப்பு என இருவகைப் பிரிவுகள் இருந்தன. இளங்கலைச் சிறப்புப் பட்டம் மூன்று ஆண்டுப் படிப்பு. அது. சில உயர்தரமான கல்லூரிகளில் மட்டுமே உண்டு. அதில் சேருவதற்கு, நிறைய மதிப்பு எண் வேண்டும். சிறப்புப் பட்டம், முதுகலைப் பட்டத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டது. அதன் உட்பொருள் என்ன? சாதாரண மாணவர்கள் இளங்கலைக்கு இரண்டாண்டும், அடுத்து முதுகலைக்கு ஈராண்டுமாக நான்காண்டு படித்துப் பெறும் முதுகலைப் பட்டத்தை, கூட அறிவுடைய மாணாக்கர் மூன்றாண்டுகளிலே பெற்றுவிடலாம். புகுமுக வகுப்பு சீர்திருத்தத்தின்போது சிறப்புப் பட்ட வாய்ப்பை எடுத்திருக்க வேண்டியதில்லை. உலகம் என்பது உயர்ந்தோர்க்கும் உண்டு; மற்றோர்க்கும் உண்டு. சிறப்புப் பட்ட முறை கல்வித் தரத்தில் உயர்ந்தோர்க்கு ஏற்பாடு செய்யப்பட்ட பெருவழி; சிறந்த வழி. . i i வடநாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்கள், இன்றும் சிறப்புப்பட்ட முறையின் வாயிலாகவ்ே, மதிநுட்பமுடையவருக்குச் சரியான வாய்ப்புகள் கொடுத்து வருகின்றன. அவ் வாய்ப்பைத் தமிழ் மக்களாகிய நாம் இழந்துவிட்டோம். பங்குச் சண்டையிலே பாழாகி வரும் தென்னாட்டு மக்கள், இந்தப் பெருங்குறையை உணரவே இல்லை. கெட்டிக்காரர்களுக்கும் சாதாரணப் படிப்பே என்றாக்கிய சீர்திருத்தம், கல்விக் கட்டமைப்பில் ஒருமைப்பாட்டை உண்டாக்க உதவிற்றா? இல்லை. இப்போதும் இந்திய நாட்டின் பெரும்பகுதியில் இளங்கலைப் பட்டம் பெற பதினான்கு ஆண்டு படிப்பு போதும். தென்மாநிலங்களிலும் கிழக்குப் பகுதிகள் சிலவற்றிலும் பதினைந்து ஆண்டு படிப்பிற்குப் பிறகே, முதல் பட்டம் பெற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/241&oldid=788026" இலிருந்து மீள்விக்கப்பட்டது