பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 203 வடஇந்திய மாணவர்கள், பதினைந்து ஆண்டு செலவிட முடிந்து, நிறைய மதிப்பெண் பெற்றால், சிறப்புப் பட்டம் பெறுகிறார்கள். அவர்கள் பட்டை தீட்டியவர்களாக ஒளிவிடுகிறார்கள். அனைத்து இந்தியப் போட்டிகளில் முன்னணியில் இருக்கிறார்கள். நாமோ ஒளிவிடும் மணிகளைப் பமைய செப்பக் காசுகளோடு போட்டு வைத்து இருக்கிறோம். சில பாடங்களில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட முதல் வகுப்புல் தேர்ச்சி பெறுவோர் இருப்பதில்லை. பல போட்டித் தேர்வுகளுக்கு, குறைந்த அளவு தகுதி, முதல் வகுப்பாம். அதை நம் பல்கலைக் கழகங்கள் கொடாமையால், இயற்கை அறிவு எவ்வளவு இருந்தாலும் அதைக் காட்டும் வாய்ப்புக்கான முத்திரை இல்லாமையால் நம் இளைஞர்கள் வேண்டுமென்றே தண்டிக்கப்படுகிறார்கள். குருதியில் உள்ள கோளாறை எளிதில் குணப்படுத்த இயலாதே! ஆந்திராவின் அணுகுமுறை சென்னைப் பல்கலைக் கழக வழியில் ஆந்திராவில் இருந்த மூன்று பல்கலைக் கழகங்களும் சென்றன. இருந்த கட்டமைப்பை மாற்றி, ஒர் ஆண்டு புகுமுக வகுப்பிற்கான பாடத்திட்டங்களை உருவாக்கின. அவை, வெளியாயின. ஆனால் எந்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வருவது? இதை முடிவு செய்யும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது. எப் படி? ஆளுநர், பல்கலைக் கழக வேந்தர் ஆவார். அவரோடு, ஆந்திர முதல்வர் கலந்து பேசினார். “பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி உரிமையுடைய உயர்கல்வி நிலையங்கள் என்பதை ஒப்புக் கொள்வோம். ' அவற்றின் கல்விச் சிந்தனைகளில் நாம் தலையிட வேண்டாம். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/242&oldid=788027" இலிருந்து மீள்விக்கப்பட்டது