பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நினைவு அலைகள் "ஆனால், பல்கலைக் கழகங்களே, அரசிடமிருந்து பெருந்: தொகை கோரும் திட்ட்ங்களைப் போதிய அவகாசம் கொடுக்காமல் கொண்டு வருவது எப்படி முறை ஆகும்? “மக்கள் வரிப் பணத்திலிருந்து பலகோடி ரூபாய்களை ஒதுக்குவது பற்றி, அரசுக்குப் பொறுப்பு இல்லையா? “பல்கலைக் கழக முடிவுகளுக்கு உடனுக்குடன் நிதி கண்டு பிடிக்கும் பொருள்ாளராக அரசை மாற்றிவிடலாமா?” என்ற கேள்வியை எழுப்பினார். ஆளுநர், இதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டார். துணைவேந்தர்களிடம் பேசினார். வேந்தரின் ஆலோசனைப் படி, ஒராண்டு தவணை கொடுக்கப்பட்டது. கட்டமைப்பு ஒர் ஆண்டிற்குப் பிறகு கலைக்கப்பட்டது. புகுமுக வகுப்பு அகற்றப்பட்டது சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாற்றி அமைக்கப் பட்டது. -- * * புகுமுக வகுப்புகள் கல்லூரிகளில் இருந்து எடுக்கப்பட்டன. அவ் வகுப்பிற்காக நியமிக்கப்பட்டு இருந்த ஆசிரியர்கள், 'மிகை ஆசிரியர்களாகச் சம்பளம் பெறும் ஊதாரித்தனத்தைக் கான நேர்ந்தது. போதிய பொறுமை காட்டியிருந்தால் மிகையான ஆசிரியர்களையும் முறையுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். பொதுப் பணம் பாழாகாமல், காப்பாற்றப்பட்டிருக்கும். 25. எழுத்துலகில் நான் எழுத்துப் பணி கல்விப் பணி எனது தொழில்! தமிழ்ப் பணி எனது வாழ்க்கையின் தொண்டு. - "கல்வி நெறிக் காவலன்' என்று நான் விளம்பரமான அளவு, நூலாசிரியர் என்பது பலருக்குத் தெரியாது. அளவிலோ, தரத்திலோ என் நூல்கள் சிறியன் அல்ல. இது எனது திட்டமிட்ட முயற்சி அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/243&oldid=788028" இலிருந்து மீள்விக்கப்பட்டது