பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5།(ས༔ த்துலகில் நான் o ..!05 காற்றில் மிதந்து வந்த விதை, எங்கோ வீழ்ந்து, எப்படியோ முளைத்து, பிழைத்து வளர்ந்து, பெருமரமாகிப் பயன்தருவதைக் காண்கிறோம். - அதையொப்ப, நான் எழுத்தாளனாகி நிற்கிறேன். இரண்டொரு நூலுக்கு ஆசிரியனா? வள்ளுவன் வரிசை காலத்தின் கட்டாயம், என் கையில் இருந்து, பத்து வயதுச் சிறுவர்களுக்கான வள்ளுவன் வரிசையைப் பெற்று எடுத்தது. அந்த வரிசையில் அடங்கியவை பதின்மூன்று நூல்களாகும். அவற்றில் பெரும்பாலானவை பெரியோர் வரலாறுகள் ஆகும். அவற்றில், சாக்ரடீஸ், யேசு, காந்தியடிகள், ஆல்பர்ட் சுவைட்சர், ஹென்றி டுனாண்ட், பிளாரன்ஸ் நைட்டிங்கேல், மார்க்கோனி, கியூரி அம்மையார், மேதை இராமானுஜம் ஆகியோரின் வரலாறுகள் அடங்கும். பன்னாட்டுப் பெருந்தொண்டர்களின் வரலாறு, பிஞ்சு உள்ளத்தையும் மனித நேய ஒருமைப்பாட்டினையும் வளர்க்க உதவும் என்று எதிர்பார்க்கிறேன். இவற்றை எழுதுவதற்கு முன்னரே, எனது நூல்கள் சில வெளியாயின. நான் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். கல்லூரிப் பருவத்தில், எனது நண்பர்கள் நடத்தி வந்த "பித்தன்' இதழுக்கு இரண்டொரு கட்டுரைகள் கூட எழுதத் துணியாமை நினைவுக்கு வருகிறது. உத்தம பாளையம் நாராயணசாமி பாரதி நடத்தி வந்த பாரதி' என்ற திங்கள், இதழில், 'பாரதப் புதல்வனின் புலம்பல்” என்ற தலைப்பிலும், சப்பானில் நவயுகம்’ என்ற தலைப்பிலும் இரு கட்டுரைகளும், முதன்மையாளர் என்ற ஒரு சிறுகதையும் எழுதிவிட்டு நின்றுவிட்டது நினைவிற்கு வரவும் வெட்கப்படுகிறேன். - கூச்சப்படாமல், எழுதிக்கொண்டே வந்திருந்தால், என்ன ஆகியிருப்பேன்? -- தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/244&oldid=788029" இலிருந்து மீள்விக்கப்பட்டது