பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - நினைவு ΕΙανουάδοί காஞ்சியில் இருந்து வெளிவந்த 'குமார விகடனி'ல் சில கட்டுரைகள் எழுத வாய்த்தது. + சென்னையிலிருந்து வெளிவந்த புதுஉலகம்' திங்கள் இதழில் சில தொடர் கட்டுரைகள் எழுதினேன். இந்திய விடுதலைப்போரில் பங்கு கொள்ள வேண்டுமென்று 'திராவிடன்’ இதழில் எழுதியதும், லண்டனிலிருந்து வெளியான ஆங்கில இதழில் இருந்து அன்னம்மாவின் முத்து மாலை' என்ற சிறுகதையை மொழி பெயர்த்து குடி அரசு வாயிலாக வெளியிட்டதும் நினைவில் மின்னுகின்றன. அத்தகைய வாய்ப்புகளைத் தேடிப்பிடித்திருந்தால், அறிஞர் அண்ணா, கட்டுரைகளை - புனை பெயரிலாவது - எழுதும்படி கேட்டதற்குச் செவிசாய்த்து இருப்பேன் அல்லவா? தன் ஆற்றல் அறியாது, நழுவி நழுவிக் கொண்டிருந்த என்னை மாற்றியது எது? எவர்? என்னை எழுத்தாளனாக வளர்த்தவை சில வளர்த்தவர் பலர். கலைக் கதிரில் எழுதினேன் அரங்கேற்றம் எதில்? கலைக் கதிர்’ என்ற திங்கள் இதழில் ஆகும். கோவை, பிளைமேடு, பூ. சா. கோ. அறக்கட்டளையின் சார்பில் 1948 முதல் நடந்துவரும் கலைக் கதிர் தனது 1955ஆம் ஆண்டின் பொங்கல் மலருக்குக் கட்டுரை எழுத என்னை அழைத்தது. கலைக் கதிர் ஆசிரியர் டாக்டர். ஜி. ஆர். தாமோதரன், நல்லார்: என் இனிய நண்பர். பொறியியல் வல்லுநரான தாமோதரன், தமிழ் வளர்ச்சியில் விருப்பமும் விழைவும் உடையவர். - பல்துறை அறிவியல் ஆயிரங்களை, தமிழில் எழுதித் தமிழை வளர்க்க வேண்டும் என்னும் அவாவால் கலைக் கதிரைத் தொடங்கி இடையறாது நடத்தி வந்தார். இன்றும் இடையறாது அது நடந்து வருகிறது தொடர்ந்து வருமானத்தைவிடச் செலவு அதிகமாயினும் இத் தமிழ்ப் பணியை வளர்க்கும் நண்பருக்குத் தமிழ் உலகம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறது. பொங்கல் மல்ருக்குக் கட்டுரை வழங்குமாறு நண்பர் தாமோதரனிடம் இருந்து எனக்குக் கடிதம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/245&oldid=788030" இலிருந்து மீள்விக்கப்பட்டது