உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நினைவு அலைகள் தனிமை எனவே, நான் இரயில் வண்டியில்தான் தில்லிக்குச் சென்று வருவேன். + போகும்போது, சிற்றுண்டிக்கும் பகல் உணவுக்கும் இடையில், கட்டுரை எழுதுவது பழக்கமாகிவிட்டது. 'கலைக் கதிர் அழைப்பு வந்தபின் சில நாள்களில் தில்லிக்குச் சென்ற நான் இரயிலில் கட்டுரை எழுதினேன். உரிய நேரத்தில் அனுப்பிவிட்டேன். அது வெளியாயிற்று. பொங்கல் மலருக்காக அரும்பிய முதல் கட்டுரை, தொடர்ந்து பல அரும்புகளைப் பெற்றது. சிலபோது மாதந்தோறும் எழுதினேன். குறள் மனம் பரப்பினேன் என்னை அறியாமலே, நான் எழுத்தாளனாக வளர்ந்து வந்தேன். அக் காலத்தில் நான் எழுதிய கட்டுரை ஒவ்வொன்றிலும் குறைந்தது நான்கு ஐந்து குறட் பாக்களாவது மிளிரும். இச் சிறப்பினை உணர்ந்த ஆன்றோர்கள், என்னிடம் நேரில் சுட்டிக்காட்டி என்னை ஊக்குவித்தார்கள். நான் கலைக் கதிருக்கு எழுதிய கட்டுரைகளில் பல, மேற்கூறியபடி, இரயிலில் எழுதப்பட்டவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பிடிக்கும். மற்ற பயன நேர்த்தில், நூல்கள், இதழ்கள் படிப்பேன். நூல்கள் கைவிடாத நண்பர்கள். ஆயின. அதனால் அலுவலக வேலை கெடுமா? கெடாது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணத்திலும் பணி புரிந்தேன் தில்லியிலிருந்து திரும்புகையில், ஒரு பெட்டி அலுவல் கோப்புகளையாவது படித்து, அவற்றைப் பற்றி ஆணையிடுவேன். சிலவேளை இரு பெட்டிக் கோப்புகளைப் பார்ப்பேன். அது எப்படி முடிந்தது? நான் நம் மாநிலத்தில் பயணம் ச்ெய்து கொண்டு இருந்தாலும் பிற இந்திய மாநிலங்களில் இருந்தாலும், நாள்தோறும் எனது அலுவலகத்துக்கு அரசு ஆணைகள், அரசின் கடிதங்கள் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/247&oldid=788032" இலிருந்து மீள்விக்கப்பட்டது