பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துலகில் நான் 209 சுருக்கங்களை மெல்லிய தாளில் தட்டச்சு செய்து, நான் சென்றுள்ள இடங்களுக்கு அனுப்பும்படி ஏற்பாடு செய்திருந்தேன். - நான் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது இப்படியே செய்வார்கள். வெளிநாட்டிற்கு எனக்கு அனுப்பும் அஞ்சல்களை இந்தியத் துரதரகம் மேற்பார்த்துக் கொடுக்கும் வகையில் அனுப்புவார்கள். சிலநாள்களுக் கொருமுறை தூதரகம் செல்வேன்; அஞ்சலைப் பார்ப்பேன். வந்த குறிப்புகளின்மேல் வழிகாட்டும் ஆணையிட்டு, மறு அஞ்சலில் அனுப்பிவிடுவேன். எனது அலுவலகத்திற்கு எனது இயக்கும் பணி, எப்போதும் கிடைத்தது. *. வெளிநாடுகளுக்கு அனுப்புவது முக்கியமானவற்றின் சுருக்கங்களே கோப்புகள் அல்ல. பணியாளர் இராசகோபால் அக் கால இயக்குநர்கள் உள்நாட்டில் பயணம் செய்கையில், காஷ்மீர்வரை சென்றாலும், தமது அலுவலகப் பணியாளரை அழைத்துப் போகலாம். என்னுடைய பணியாளர் இராசகோபால், நீண்டகாலம் பணியாற்றியவர். வெள்ளைக்கார இயக்குநர் காலத்தில் இருந்தே, அணுக்கப் பணியாளராக இருந்து பண்பட்டவர். ■ தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரையாடும் திறமை பெற்றவர். நம்பிக்கைக்கு உரியவர்; விழிப்பானவர்; சுறுசுறுப்பானவர்; எனவே, அவரை அழைத்துச் ச்ெல்வேன். அவர், நாகபுரி இரயில் நிலையத்தில், என் பெட்டிக்கு வந்து, கோப்புப் பெட்டியைத் திறந்து வைத்துவிட்டுப் போவார். இரண்டு மணிகளில் கோப்புகளைப் பார்த்து முடித்துவிடுவேன். a அடுத்து நிற்கும் நிலையத்தில் இராசகோபால் மீண்டும் வந்து. கோப்புகளைப் பெட்டியிலிட்டுப் பூட்டி விடுவார். இப்படி, எனது பயணம் அலுவலக வேலையைத் தாமதம் ஆக்காதபடி பார்த்துக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/248&oldid=788033" இலிருந்து மீள்விக்கப்பட்டது