உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நினைவு அலைகள் கருத்துரிமையைப் போற்றும் ஆசிரியர் பகீரதன் த தும் ஆ அடிக்கடி கலைக் கதிர் இதழில் என் கட்டுரை வருவதைக் கண்ட மற்ற நண்பர்கள், என்னைத் தங்கள் இதழுக்கும் எழுதும்படி கட்டளையிட்டார்கள். அவர்களில் முதலில் வெற்றி பெற்றவர் சத்ய கங்கை ஆசிரியர் பகீரதன் ஆவார். கருத்துரிமையை நம்புகிற எழுத்தாளர்களில் அவர் ஒருவர். 1961ஆம் ஆண்டுவரை கலைக் கதிர்’ இதழுக்கு மட்டும் அவ்வப்போது எழுதி வந்த நான், எனது முதல் சோவியத் பயணம் பற்றி அங்கும் இங்கும்’ என்ற தலைப்பில் பகீரதன் முதலில் நடத்திய "கங்கையில் எழுதினேன். = கங்கை’தான் பின்னால் மாதமிருமுறை வெளியாகும் சத்ய கங்கை"யாக வெளிவந்தது. அதில் எழுதத் தொடங்கினேன் எழுத்துப் பணியை முழுநேரப் பணியாகக் கொள்ளாவிடினும் வயது வந்தோர்க்காக, முப்பதுக்கு மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியராகும் பேறு பெற்றுள்ளேன். அவற்றில் மிகப் பெரும் பாலானவை "சத்ய கங்கை”யில் விளைந்தவை. வேறு இதழ்களில் எழுதத் தூண்டினார் பகீரதன் "சத்ய கங்கையில், அநேகமாக அதன் தொடக்க காலம் முதல் தொடர்ந்து எழுதிவரும் என்னை, வேறு இதழ்களோடு தொடர்பு கொண்டு எழுதத் துண்டுகோலாக அமைந்தவர், பெரிதும் பகீரதனே. அவருடைய சத்ய கங்கை எனது இரண்டாவது சோவியத் பயணக் கட்டுரைகளை நான் கண்ட சோவியத் ஒன்றியம்’ என்னும் தலைப்பில் வெளியிட்டு உதவிற்று. "வள்ளுவர் வாய்மொழி', 'வாழ்விக்க வந்த பாரதி”, “ஊருக்கு நல்லது’, ‘நினைவில் நிற்பவர்கள்' மேதை மேகநாதன் ஆகிய நூல்கள் சத்ய கங்கை”யில் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தவையே. எனது மூன்றாவது சோவியத் பயணத் தொடர் கட்டுரைகளை "சோவியத் மக்களோடு பதினைந்து நாள்கள் என்று எழுதினேன். அவற்றைப் பகீரதன் பெருந்தன்மையோடு பெரிய பத்திரிகை யான 'தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த திரு. சாவியோடு தொடர்பு கொண்டு, அவ்வார இதழில் தொடர்ந்து வெளிவர உதவி செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/249&oldid=788034" இலிருந்து மீள்விக்கப்பட்டது