உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துலகில் நான் 211 எனது எழுத்துகளைப் புதிய வட்டாரங்கள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த, புகழ்பெற்ற எழுத்தாளர் சாவிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தனக்கு நிகர் தானேயாக விளங்கிய எழுத்தாளர் தமிழ்வாணன், எனது நண்பரே! இருப்பினும், எனது மற்றோர் உலகப் பயணக் கட்டுரைத் தொடர்களை 'கல்கண்டில் வெளியிட ஏற்பாடு செய்தவர் வள்ளல் பகீரதன் ஆவார். அக் கட்டுரைத் தொகுப்பு 'உலகத் தமிழ்” என்ற தலைப்பில், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தால் வெளியிடப்பட்டது. புதியவரின் பாராட்டு ஒருமுறை கோவை விரைவு வண்டியில், சேலத்திலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன். வண்டி ஒடிக் கொண்டிருக் கையில், திடீரென, என் முன்னர் ஒர் அம்மையார் தோன்றிப் பணிவுடன் வணங்கினார். "தங்களைத் தெரியவில்லையே அம்மா” என்றேன் “அறிமுகம் இல்லை. ஆகவே தெரியவில்லை. சில வாரங் களுக்கு முன்பு, என் பேரன் கையில் 'உலகத் தமிழ்’ என்னும் நூல் வைத்திருந்தான். “அவன் படித்தபின், நானும் அதை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந்தேன். “எவ்வளவு இனிய நடை சிறுசிறு தொடர்கள்! ஆற்றோட்ட மான போக்கு! இப்படிப் பல நூல்கள் எழுதுங்கள். இளைய தலைமுறையின் பார்வையைப் பெரிதாக்குங்கள், விரிவாக்குங்கள். “அந் நூலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே, உங்களைத் தொந்தரவு செய்கிறேன். குமுதத்தில் உங்கள் படத்தைப் பார்த்ததாக நினைவு. -- "நீங்கள்தான். நெ. து. சு.வாக இருக்க வேண்டும் என்று நினைத்து இவ்வளவு பேசுகிறேன்” என்றார் அம் மூதாட்டி பெரியம்மாவுக்கு நன்றி கூறி, எழுந்து வணங்கி, விடை கொடுத்தேன். சென்னையில் இறங்கும்போது, “நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. உலகத்தமிழ் போல், இனிய நல்ல நூல்களைத் தொடர்ந்து எழுதி உதவுங்கள்” என்று மீண்டும் வேண்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/250&oldid=788035" இலிருந்து மீள்விக்கப்பட்டது