உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவு அலைகள் . அதை வேண்டுகோள் என்பதைவி , வாழ்த்து' என்று கொள்வதே பொருத்தம். அவ்வாழ்த்து பலிக்கட்டும். குமுதத்துக்கு நன்றி 'குமுதம் இதழிலும் தொடர்ந்து பதின்மூன்று கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு நேரிட்டது. அவை தவிர, சிற்சிலபோது எனது தனிப் பேட்டிகள், கட்டுரைகளை குமுதம் வெளியிட்டது. என்னை எழுத்துலகில் வளர்த்தது. நினைக்க நன்றி சுரக்கிறது. 'கல்கி', 'ஆனந்த விகடன், 'கலைமகள் ஆகியவற்றில் சிறப்பு மலர்களுக்குக் கட்டுரை எழுத வாய்ப்புகள் பெற்றேன். தமிழ்நாடு இதழில் எண்ண அலைகள்' சங்கத் தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் இருந்து தமிழ் நாடு’ என்னும் நாள் இதழைக் கருமுத்து தியாகராச செட்டியார் என்னும் ஆலைத்தொழில் அதிபர் சிறப்பாக நடத்தி வந்தார். அவர், மதுரையில், தியாகராசர்கலைக் கல்லூரி, தியாகராசர் பொறி இயல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றைத் தமது சொந்த அறக் கட்டளையிலிருந்து நடத்தி வந்தார். அதுபோல், அவர் பிறந்த ஊரான ஆ. தெக்கூரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று நடத்தி வந்தார். கல்வித் தொண்டு பற்றி எங்களுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்பு தமிழ்ப் பற்று பற்றிய நட்பாக மலர்ந்தது. நாங்கள் அடிக்கடி காணவும் நேர்ந்தது. உரிமையோடு விருந்தோம்புவார்; ஊக்கப்படுத்துவார். அவரது நாளிதழில், ஆறு திங்கள், வாரம் தவறாது கட்டுரைகள் எழுத வாய்ப்பு கிடைத்தது. 'எண்ண அலைகள்' என்ற தலைப்பில் எழுதினேன் அப்படி எழுதி வருகையில், நான் ஆங்கில நாட்டிலுள்ள 'பிரிட்டிஷ் கெளன்சில்” என்ற நல்லுறவு அமைப்பின் சார்பில் அழைக்கப்பட்டு, அந் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன்.அயல் நாட்டில் இருந்தும் நேரா நேரத்திற்குக் கட்டுரைகளை அனுப்பி வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/251&oldid=788036" இலிருந்து மீள்விக்கப்பட்டது