உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்துக்குடிஆசிரியர் சங்க ஆண்டு விழா 215 “உங்களுக்குப் போக விருப்பமானால் சொல்லுங்கள். உங்கள் இசைவை அவருக்குத் தெரிவித்து விடுகிறேன்” என்று அமைச்சர் முடித்தார். * “தங்கள் பதில் சரியே நம் பொதுமக்கள் நலனைவிட எனது தனி வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதாக இருந்தால், டி. சதாசிவ ரெட்டி லைபீரிய நாட்டுக்கு யூனெஸ்கோ’ பதவிக்கு அழைத்த போதே, சென்றிருப்பேனே, முடிந்த வரையில் இங்கேயே இருந்து, நம் நாட்டுச் சாதாரண மக்களை மேம்படுத்தப் பாடுபட விடுங்கள்” என்று நான் வேண்டிக் கொண்டேன். == “சரி” என்றார், கல்வி அமைச்சர். அழைப்பை ஏற்றேன் ஏற்றுக் கொண்ட அழைப்பு எது? தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க ஆண்டு விழா அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அன்று, சென்னை மாகாணத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னே இருந்தது, திருநெல்வேலி மாவட்டமே. அப் பகுதியில், கல்வி வளர்ப்பதில், கிறித்தவ திருச்சபைகள் முன்னோடிகளாக விளங்கின. அவற்றைப் பார்த்து, நாடார் உறவின் முறையினர், ஆங்காங்கே, கல்வி நிலையங்களை அமைத்தார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் ஒரளவு கல்வியைப் பரப்பினார்கள். அப்படிக் கல்வி செழித்த நகரங்களில் ஒன்று, துரத்துக்குடி ஆகும். அவ்வூரிலிருந்த அறுபது தொடக்கப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஒன்றுகூடி, ஆண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள் ஏன் ஏற்றேன்? அந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றும்படி என்னை அழைத்தார்கள். அந்தக் கடிதத்தில், “இருபத்தைந்து ஆண்டுகளாக, இயக்குநர் எவரும் வராத நகருக்கு அழைக்கிறோம்” என்று எழுதி இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/254&oldid=788039" இலிருந்து மீள்விக்கப்பட்டது