உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 நினைவு அலைகள் அதோடு, “நீங்கள், பொதுக் கல்வி இயக்குநரான முதல் தமிழர். தமிழ் பேசும் தமிழர்” என்று எழுதியிருந்தார்கள். அவை என் நெஞ்சைத் தொட்டன. கல்வி, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்ல. அது வயலில் விளையும் நுட்பப் பயிருக்கு ஒப்பானது. எனவே, கல்வியின் த்ரம் உயர்வாக இருக்க, பல பிரிவினரின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் தேவையானது. சொல்லிக் கொடுப்பது, கிளிப் பிள்ளைகளுக்கு அல்ல; குரங்குக் குட்டிகளுக்கு அல்ல; பயிற்சி பெறுபவை குதிரைக் குட்டிகள் அல்ல; மனிதக் குழந்தைக்ளுக்கக் கற்பிக்கிறோம். மாந்தருக்கே பயிற்சி கொடுக்கிறோம். அவர்களின் உணர்வுபூர்வமான - அக்கறையான முயற்சியே முதல் தேவை. மாணாக்கருக்கு எழுச்சியூட்டினால், அவர்கள் அக்கறையும் ஈடுபாடும் மேலும் அதிகமாகும். மாணாக்கருக்குக் கல்வி ஆர்வமிருந்தாலும், பெற்றோர் அதைக் குறைத்தபடியே இருந்துவிட்டால் அது கல்வியைப் பாதிக்கும். * - பல நூற்றாண்டுகளாக, வரலாற்றின் சதியால், நம் நாட்டு மக்கள் கல்வி பெற முயலவே இல்லை. எனவே கல்விக்குத் தடைக் கற்களாகச் செயல்படும் பெற்றோர்கள் ஏராளம், ஏராளம். அவர்களின் சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களின் ஆர்வத்தைத் துாண்டிவிட்டு, அவர்கள் ஒத்துழைப்பைப் பெறல் இன்றியமையாததாகும். மாணாக்கரும் பெற்றோரும் போதிய அக்கறை காட்டுவது எவ்வளவு தேவையோ அவ்வள்வு தேவை சமுதாயச் சூழல் ஆகும். படியுங்கள், படியுங்கள், மேலும் படியுங்கள்’ என்னும் லெனினுடைய அறிவுரையை முழுமையாகப் பின்பற்றும் சோவியத் சமுதாயம், கல்விக்கு ஆதரவான சமுதாயம் ஆகும். அப்படி மாணாக்கரை ஒருமனப்படுத்தி வைத்ததால்தான். அந் நாடு இன்றைய பெருநிலையை அடைந்துள்ளது. என்வே நம் சமுதாயச் சூழலைக் கல்விக்கு உதவியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அது கல்வி வளர்ச்சியைப் பாதிக்காதபடி மிக்க கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/255&oldid=788040" இலிருந்து மீள்விக்கப்பட்டது