பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூத்துக்குடி ஆசிரியர் சங்க ஆண்டு விழா 21:ے மாலை மரியாதைகள் குவிந்தன மாலைகள் குவிந்தன. அறுபது பள்ளிகளும் ரோஜா மாலைகளையோ, மல்லிகை மாலைகளையோ கொண்டு வந்தன. பொதுக்கல்வி இயக்குநருக்கு, காந்தம்மாவுக்கு, கல்வி அலுவலருக்கு, வட்ட ஆய்வாளருக்கு என்று குறைந்தது நான்கு மாலைகளையாவது ஒவ்வோர் பள்ளியும் கொண்டு வந்தது. திரு. இராமசுப்புவுக்கும், சாமி. மாசிலாமணிக்கும் மாலை அணிவித்த பள்ளிகளும் பலவாகும். திருவள்ளுவனுக்கும் சில பள்ளிகள் மாலையிட்டு மகிழ்வித்தன. நேரமும் பணமும் பாழாவதைப் பற்றி என்னுள் வெகுளி பொங்கிற்று. குறள் மின்னி சினத்தைத் தணித்தது. என் பொறுமையை அன்று தூத்துக்குடி நண்பர்கள் சோதித்தது போல் வேறு எவரும் சோதிக்கவில்லை எனலாம். கே. வி. கே. சாமி “போதுமே!” என்று நான் சீறத் துடிக்கையில், எடுப்பான உருவத்தினர் ஒருவர், ஆள் உயர மாலையோடு மேடை ஏறினார். ஒலி பெருக்கியிடம் சென்றார். வெண்கல ஒலியில், “அய்யா! பொதுக்கல்வி இயக்குநர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், அந் நகரிலுள்ள, வரதராசப் பெருமாளுக்கு ஆள் உயர - தண்டுமாலை சாத்துவது வழக்கம். 'அவ் வழக்கத்தையொட்டி, முதன்முறை நம் நகருக்கு, வாழ்க்கைத் துணைவியாரோடும் அருமை மகனோடும் வந்துள்ள, நெ. து. சுந்தரவடிவேலு அய்யாவிற்கு, இம் மாலையைச் சூட்டி மகிழ்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே, மாலை யணிவித்தார். சில மணித்துளிகள் கூட தாங்க இயலாத அளவுக்கு மாலை பளுவாக இருந்தது. என் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றப் பிறர் துணை தேவைப்பட்டது. எல்லாரிலும் பெரிய மாலையை அணிவித்த அன்பர் யார்? திரு.கே. வி. கே. சாமி அவர்கள். து.ாத்துக்குடி நகரில் நடந்து வந்த தனியார் உயர் தொடக்கப் பள்ளி ஒன்றின் தாளாளர். பெரியாரின் பெருந்தொண்டர்களில் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/260&oldid=788045" இலிருந்து மீள்விக்கப்பட்டது