உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நினைவு அலைகள் 1948இல் தூத்துக்குடியில், நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தொண்டர் படைத் தலைவராகச் செயல்புரிந்தவர். அம் மாநாட்டிலேயே, தந்தை பெரியார், கே. வி. கே. சாமியைப் பெயர் சொல்லிப் பாராட்டினார். ஒர் மாநிலத்தின் ஆளுநராக விளங்க வேண்டிய செயல் திறன் உடையவர் கே. வி.கே. சாமி என்று பாராட்டினார். வள்ளுவன்சொன்னது ஒலி பெருக்கியில் கேட்டது தீவிர சுயமரியாதைக்காரராகிய சாமி, அவ்வளவு பெரிய மாலையை எனக்குச் சூட்டும்போது, திருவள்ளுவன் - “இப்படி மாலைகளுக்குச் செலவழித்த பணத்தை அப்படியே காசாகக் கொடுத்தால் ஒரு பள்ளிக்கூடமே கட்டி முடித்து இருக்கலாம்” என்று, குழந்தைத்தனமாகக் கூறினான். கள்ளங்கபட மறியாத அச் சொற்கள் எதிரிலிருந்த ஒலி பெருக்கி வழியாக, மண்டபம் முழுவதும் எதிரொலித்தன. அவையோர் கைதட்டுதல் அடங்க, பல மணித்துளிகள் ஆயின், மாலை அணிவித்தலும் வரவேற்பு இதழ்கள் படித்தளித்தலும் முடிந்த பிறகு, திட்டமிட்டபடி, விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றவர்கள் பேசிய பிறகு, எனது பேச்சு, நிறைவு உரையாக அமைந்தது. காந்தம்மாள் உரை எனக்கு முன், என் மனைவி, காந்தம்மா பேசினார். அப் பேச்சில், 'முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை பெண் ஆசிரியைகளையே நியமிக்கும்படி ஒரிடத்தில் வேண்டிக் கொண்டதைச் சுட்டிக்காட்டி, அந்நிலை மாணாக்கருக்குக் கற்பிக்கப் பெண்களே பொருத்தமானவர்கள்’ என்று கூறினார். துாத்துக்குடி நகரில் ஏராளமான பெண் ஆசிரியைகள் பணிபுரிவதைப் பாராட்டினார். மேலும், ஆசிரியைகள் நினைத்தால் அத்தனை குழந்தைகளையும் நல்ல மக்களாக்க முடியும் என்றார். 'நாம் குழந்தைகளை அடித்தாலோ, ஏசினாலோ மிரட்டி னாலோ அவர்களுக்கு நற்பழக்கங்களோ, படிப்போ, கட்டுப்பாடோ வருவது மிகவும் கடினம் என்பதை நினைவூட்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/261&oldid=788046" இலிருந்து மீள்விக்கப்பட்டது