உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூட ஆண்டு விழா 223 'குழந்தை ஒருமுறை படிக்காவிட்டால், 'இது பரவாயில்லை, அடுத்த முறை நீங்கள் நன்றாகப் படிப்பீர்கள்’ என்று சொன்னால், அவர்களுக்கு ஊக்கம் பிறக்கும்; ஆசிரியை கொண்டுள்ள நல்லெண்ணம் புரியும். "அது மட்டுமன்று நம் குழந்தைகள் நல்ல பழக்கவழக்கத்துடன், நல்ல மரியாதையுடன், நல்ல கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றால், நாமும் அவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து செயல்புரிய வேண்டும். “பிள்ளைகளிடம் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு காட்டாதீர்கள். எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக, சமமாக நடத்துங்கள். “சின்னஞ்சிறு வயதில், இயற்கையாகச் சுரக்கும் அன்பு, இரக்கம் ஆகிய பண்புகளைப் போற்றி வளருங்கள். மேனாட்டுக் குழந்தைகள் - தங்கள் வீடு தேடி வந்தவர்களைக் கண்டு ஒடி ஒளிவதில்லை. மாறாக, வந்தவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடு”மென்று கேட்டு உதவுவார்கள். மரியாதையான இப் பழக்கத்தைச் சிறுவயதில் வளர்ப்பது எளிது. “நல்ல தேர்ச்சி உடையவர்களாக வளர்ப்பதைப் போலவே, „ ** நல்ல மக்களாக வளர்ப்பதிலும் நாட்டம் செலுத்தி வர வேண்டும். இப்படி அமைந்தது, காந்தம்மாவின் உணர்வுமயமான பேச்சு. 27. பள்ளிக்கூட அன்னதானம் பாராட்டின் பயன் துரத்துக்குடி தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க ஆண்டு விழா என் தலைமையில் சிறப்பாக நடந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் கச்சிதமாக அமைந்து இருந்தது. "அப்படி நடந்ததற்குப் பதில், இப்படி நடந்திருக்கலாமே. என்று எவரும் குறைகூற இயலாத அளவு செம்மையாக நடந்தது. விழாவின் சிறப்பால் தூண்டப்பட்டு நான் நீண்டஉரை யாற்றினேன். எனக்கு அளித்த வரவேற்புகளுக்கு நன்றி கூறுகையில் “நீங்கள் எனக்குச் சூட்டிய புகழாரங்கள். நல்ல மனிதனுக்கு இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/262&oldid=788047" இலிருந்து மீள்விக்கப்பட்டது