உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22-1 -- நினைவு அலைகள் --- வேண்டிய நல்லியல்புகள், நற்குணங்கள், நன்னடத்தை ஆகியவற்றின் மாலையாக அமைந்து உள்ளன. அவற்றை நான் இதுவரை அடையாது இருப்பினும் இனியாவது பெறுவதற்கு உங்கள் பாராட்டு உதவும் என்பது உறுதி” என்றேன். ஆசிரியர்கள் ஆற்றல் - நன்றி கூறியபின் ஆசிரியர்களிடம் எழுச்சியூட்ட முயன்றேன். “ஆசிரியர்கள் வல்லமை உள்ளவர்கள்; உயர்ந்த வல்லமை உள்ளவர்கள். “தாங்கள் உணராத அளவு பெரும் வல்லமை உடையவர்கள். 'ஆவதும் அழிவதும் ஆசிரியை ஆசிரியர்களால் என்ற புதுமொழி உருவாக்கினால், அதுபொருந்தும். "குழந்தைகளிலே முட்டாள் குழந்தைகள் உண்டா? இல்லை! படிப்பு வராத குழந்தைகள் உண்டா? இல்லை! அப்படிப்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. “வந்த குழந்தைகளை அறிவு நிறைந்த குழந்தைகளாக, ஆற்றல் மிக்க குழந்தைகளாக, ஆண்மையுள்ள சிறுவர் சிறுமிகளாக, சிறந்த குடிமக்களாக ஆக்கக்கூடிய வாய்ப்பும் வல்லமையும் ஆசிரியர்களுக்கே உண்டு. "நீங்கள் பணிபுரியும் முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுகளில் ஆயிரம் ஆயிரத்தைந்நூறு குழந்தைகளை வளர்த்து நல்லவர்களாக உருவாக்கும் வாய்ப்பு பெற்றுள்ளிர்கள். ஆண்மை தரும் கல்வி ‘சாமி விவேகானந்தர் கண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக். காட்டிய காட்சி ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது. "அவர், அமெரிக்க நாட்டின் துறைமுகம் ஒன்றை வேடிக்கை பார்த்தபடி நின்றார். கண்டது என்ன? “ஒடிந்த உள்ளத்தோடு, ஒட்டிய கன்னத்தோடு, குழி விழுந்த கண்களோடு, நடைதளர்ந்து இறங்கும் கப்பற் பயணிகளைக் கண்டார். 'வந்தவர்கள் பல நாட்டினர்: பல மொழியினர்; தத்தம் நாட்டிலே வாழவகை தெரியாமல், அமெரிக்காவைப் புகலிடமாகக் கொண்டு வந்தவர்கள்: பார்ப்போர் பரிவைத் துரண்டியவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/263&oldid=788048" இலிருந்து மீள்விக்கப்பட்டது