உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூட ஆண்டு விழா 225 "சோகமே உருவான அவர்கள், சில நாள்களில் தெம்பு பெற்று விடுகிறார்கள்; மிடுக்கு நடைபெற்று விடுகிறார்கள். “அமெரிக்க நாடு அளித்த வாய்ப்புகள் அவநம்பிக்கையை ஒட்டிவிட்டன. ”மண்ணில் நல்ல வண்ணம் வாழமுடியும்’ என்ற நம்பிக்கையை வளர்த்துவிட்டன. "இதை அழகாகப் படம்பிடித்துக் காட்டிய சாமி விவேகானந்தர் நமக்கு, “ஆண்மை தரும் கல்வி தேவை” என்று கோடிட்டுக் காட்டுகிறார். “நம்முடைய நாட்டின் ஒடிந்துபோன மக்கள் பள்ளிகளுக்கு வந்தால், ஒய்ந்துபோன மக்கள் கல்விக்கூடங்களுக்கு வந்தால், நம்பிக்கையில்லாத மக்கள் கல்வி நிலையங்களுக்கு வந்தால், அந்த அமைப்புகள், அவர்களுக்குப் புத்துயிரும் புத்துணர்ச்சியும் புத்தொளியும் புதுவாழ்வும் கொடுத்து அனுப்ப வேண்டும். இரு பார்வைகள் “அறிவாளி ஒருவன், சிறைச்சாளரம் வழியே வெளியே பாாக்கிறான். அவன் பார்வை, வானத்திலே ஒளிவிடும் விண்மீன்கள் மேல் வீழ்கிறது. அசைக்கமுடியாத நம்பிக்கை பெறுகிறான். “உலகில் இன்னும் ஒளி இருக்கிறது. இப்போது சிறைக்குள் இருந்தாலும் சில நாள்களில் வெளியே உலாவுவேன்’ என்று நம்பிக்கை பெறுகிறான். "வேறொருவன், சிறைச்சாளரம் வழியே பார்க்கிறான். சுற்றி உள்ள குப்பை கூளங்கள் தென்படுகின்றன; அருகில் ஒடும் சாக்கடை தெரிகிறது. அவனுடைய சோகம் அதிகமாகிறது. துப்புரவான சூழலை உருவாக்குங்கள் “உண்மையிலேயே ஆசிரிய சமுதாயத்திற்குக் குறைகள் பல உள்ளன. அவற்றைப் பற்றியே சிந்தித்து நம்பிக்கை இழந்து வீணாகாதீர்கள். “பள்ளிக்கூடங்களின் வேலை, மாணவர்களை மேல்வகுப்பிற்கு அனுப்புவது மட்டுமன்று! அவர்களிடம் நல்ல பழக்கவழக் கங்களைப் பதிய வைப்பதுமாகும். 'தன் துய்மை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். சுற்றுச்சூழல் துய்மை பற்றியும் கவலைப்பட வேண்டும். தெருக்களின் துய்மையைப் படித்தவர்களும் கெடுக்கிறார்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/264&oldid=788049" இலிருந்து மீள்விக்கப்பட்டது