பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவு அலைகள் "தெருவெங்கும் எச்சில் துப்புகிறார்களே! இக்கொடிய பழக்கங்களை மாற்ற வேண்டாமா? வீடும் கல்வி நிலையமும் ஊரும் ஒத்துழைத்து, துப்புரவான சூழலை உருவாக்கப் பாடுபடுவோமாக “கேட்கும் பாடங்கள் பற்றி, சிந்திக்க, கேள்வி கேட்க, தாங்களே முடிவுக்கு வர, மாணாக்கரை ஊக்கப்படுத்துங்கள். “வரும் தலைமுறைகள், சுயசிந்தனை உடையவர்களாக, நற்குணமுடையவர்களாக, சிறந்த ஒழுக்க சீலர்களாக, சான்றோர்களாக, உருவாகும் வகையில் உழையுங்கள். குறைகளை மறந்து, வாய்ப்புகள்ை நினைத்துத் தொண்டாற்றுங்கள்” என்று அறிவுரை கூறினேன். திருவள்ளுவன் சொன்னதென்ன? அடுத்து, என் மகன் திருவள்ளுவன் மேடையில் இருந்தபடியே பேசிய குழந்தைமொழியைப் பற்றிப் பேசினேன். அவன் கருத்துக்கு மாற்றுருவம் தந்தேன். “அவன் சிறுவன் உலகமறியாத சிறுவன்! நல்ல உள்ளத்தவன்! நினைவு ஆற்றல் உடையவன்! ஊர்க்காரர்களிடம் நல்ல பள்ளிக்கூடங்கள் கட்டித் தரும்படி வேண்டுவேன்’ என்று காற்று வாக்கில் நான் சொன்ன்தை நினைவுக்குக் கொண்டு வந்தான். “பள்ளிக் கட்டடத்திற்கு எவ்வளவு தேவை என்று உலகியல் பட்டறிவு இல்லாததால், ‘மாலைக்குப் பதில் பணமாகக் கொடுத்திருந்தால், ஒரு கட்டடமே கட்டிக் கொடுத்திருக்கலா மென்று, அவனது குழந்தை உள்ளத்திற்குத் தோன்றியது. இதில் மறைந்துள்ள உண்மை என்ன? "மாலைகளுக்காக, இவ்வளவு பணம் வீணாகலாமா என்பதே மறைபொருள். “இந்த நிகழ்ச்சியில் மாலைகளுக்காக ஈராயிரம் ரூபாய்களுக்கு மேல் செலவிட்டு இருப்பீர்கள். மற்றவர்கள் அப்படி வீணாக்கியது வியப்பல்ல; அதை வழி வழி வரும் மரபு என்று எண்ணிப் பொறுத்துக் கொள்ளலாம். “நாடறிந்த சுயமரியாதைக்காரராகிய திரு. கே. வி. கே. சாமி ஆள் உயர மாலைக்குப் பெரும்பணம் செலவிட்டிருப்பது முறையா? சரியான வழிகாட்டுதலா? “அவர் மனத்தைப் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இனியாவது புதுவழி செல்ல வேண்டுமென்னும் அவாவால், நான் பேசுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/265&oldid=788050" இலிருந்து மீள்விக்கப்பட்டது