பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூட ஆண்டு விழா 227 “மாலைகளுக்குச் செலவிட்ட, ஈராயிரம் ரூபாய்களைத் திரட்டியிருந்தால், ஏதாவது ஒரு பள்ளியில் நூறு ஏழை மாணவர்களுக்குப் பகல் உணவு போட்டிருக்கலாம். ஒராண்டு முழுவதும் போட்டிருக்கலாமே. பள்ளிக்கூட அன்னதானத்தால் இரு வகைப் பயன்’ 'அறுபது தொடக்கப் பள்ளிகள் இருக்கையில், எந்தப் பள்ளியில் போடுவது என்று கேட்பீர்கள்? “திருவுளச் சீட்டின் மூலமாக, ஏதாவது ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம். “சில வாரங்களில் அமைச்சர் ஒருவரோ, அலுவலர் ஒருவரோ, வருகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். "அப்போது மாலைகள் சூட்டும் செலவை, பணமாகத் திரட்டி அவரைக் கொண்டே, மற்றோர் பள்ளியில் பகல் உணவு தொடங்கச் செய்யலாம். அவருக்கு மரியாதைக்கு ஒரே ஒரு மாலை சூட்டுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். “இப்படிச் சில பள்ளிகளில் செம்மையாகப் பகல் உணவு போட்டால், சில செல்வர்கள் தங்கள் வீட்டுத் திருமணச் செலவோடு பள்ளிக்கூட அன்னதானத்திற்கு உதவ முன் வரக்கூடும்; முன்வரும்படியும் துாண்டலாம். “வீட்டிலேயே அன்னதானம் இட்டால், உயிர் கொடுத்த பலன் ஒன்றுதான். பள்ளிக்கூட அன்னதானத்தால் இரு நன்மை விளையும். உயிர் கொடுக்கும் நன்மையோடு, கல்விக் கண் கொடுக்கும் நன்மையும் சேரும். எனவே நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” என்று தொடங்கும் கவியரசர் பாரதியின் பாடல் வரிகளை ஒப்புவித்தேன். தொடர்ந்து, “தமிழ்நாட்டுச் சிற்றுார் பழக்கம் உங்களுக்குத் தெரிந்ததே! பயிரிட்டு, அறுத்து, ஒப்படி செய்து, தானியத்தை அளக்கையில் என்ன செய்கிறோம்? “முதல் அளவை சாமிக்கு இரண்டாம் அளவை ஊர்க் காவலர்களுக்கு மூன்றாம் அளவையிலிருந்தே சொந்தக்காரருக்குச் சேரும். இது நல்ல மரபு. இதில் ஒரு சிறு மாற்றம் செய்வதால், ! குடிமூழ்கிப் போகாது. “வழக்கம்போல் முதல் அளவை சாமிக்கே இருக்கட்டும். இரண்டாம் அளவையும் அப்படியே தொடரட்டும். மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/266&oldid=788051" இலிருந்து மீள்விக்கப்பட்டது