பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நினைவு அலைகள் “வழக்கமான அலுவல் கெடாமல், ஆய்வாளர்கள் இதை ஊக்கப்படுத்த முடியுமாவென்று பாருங்கள். “இதுபற்றிச் சுற்றறிக்கையோ, ஆணையோ வேண்டாம். மக்கள் நாடியைப் பார்ப்பது, வாய்மொழியாகவே நடக்கட்டும்” என்று எழுதினேன். கல்வி அமைச்சரின் அவநம்பிக்கையை அவருக்குத் தெரிவிக்க வில்லை. சில வாரங்கள் சென்றன. திரு. வெங்கடசுப்பிரமணியத்திடம் இருந்து பதில் கடிதம் வந்தது. தனிப்பட்ட முறையில் எழுதியிருந்தார். ‘நாகலாபுரத்து நாயக்கமாருக்கு உறவினர்கள் வாழும் சில ஊர்களிலும் நிலம் உடையோர் தானியம் கொடுத்து, ஊர்ப் பொதுவில் பள்ளிக்கூடப் பகல் உணவு நடத்த ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'ஜூன் திங்களில், பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு அன்னதான விழாவைத் தொடங்க இருக்கிறார்கள். "அதோடு, இக் கருத்தைத் தந்த, தாங்களே அவ் ஆர்களுக்கு வந்து, பகல் உணவு வழங்கலைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று, பொதுமக்கள் விரும்புகிறார்கள். ஆசிரியர்கள் விழைவும் அது. 'நீங்களே நேரில் வந்து தொடங்கிக் கொடுத்தால், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். 'கோடை விடுமுறைக்குப்பின் மூன்று நாள்களாவது கோவில்பட்டிக்கு ஒதுக்கும் வகையில் அலுவல்களை அமைத்துக் கொள்ளும்படி முன்கூட்டியே வேண்டிக் கொள்ளுகிறேன்’ என்று மாவட்டக் கல்வி அலுவலர் எழுதியிருந்தார். கல்வி அலுவலர்கள் பெரும் நிலப்பரப்புகளுக்கு அதிகாரிகளாக இருந்த காலம் அது மக்களும் அலுவலர்களை மதித்த காலம் ஆணையிடும் உரிமைகளையும் அலுவலர்கள் பெற்றிருந்தார்கள் இத்தனையும் சேர்ந்து இத் திட்டத்திற்குக் கை கொடுக்காதா? 'கோவில்பட்டி பகுதியில் பகல் உணவுத்திட்டம் முளைத்து வளர்ந்தால்தான், பிற அலுவலர்களைத் துாண்டுவது' என்று முடிவு செய்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/271&oldid=788057" இலிருந்து மீள்விக்கப்பட்டது