பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்க-ஆண்டு விழா 231 "அலுவலர்கள் கெடுபிடிக்கு அஞ்சி, இவ்வூரிலும் அவ்வூரிலும் தொடங்குவார்கள். மூன்று திங்களுக்குமேல் எங்கும் நடக்காது: ஓடிவிடுவார்கள். உங்களுக்கு மனச்சோர்வும் பழிச்சொல்லும் வந்து சேரும்; ஆனால், வேறு வழி இல்லை. முதலமைச்சரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஊர்க்காரர்களைக் கொண்டு பகல் ணவு மையங்களைத் தொடங்க முயலுங்கள். அதிகம் எதிர்பார்த்து, அதிர்ச்சி அடையாதீர்கள்” என்றார் கல்வி அமைச்சர். முதலமைச்சர் நம்புகிற ஒன்றை - துறைக்கு உரிய அமைச்சர் நம்பாத ஒன்றை, அரசு ஊழியன் செய்வது பேராபத்து என்பது புலனாயிற்று. என் சங்கடம் 'முதலமைச்சரிடம் தங்கள் கருத்தைச் சொல்லிப் பாருங்களேன்’ என்று கேட்க நினைத்தேன். மறுவினாடி அதைக் கை விட்டுவிட்டேன். “நல்லதுங்க” என்று ஒப்புக்கொண்டு விடைபெற்றுக் கொண்டேன். - வழியில், முன்பு ஒருமுறை, தில்லியில், அமைச்சர் அளகேசன், அமைச்சர் பக்தவத்சலனாரிடம் “தமிழ்நாட்டு விவகாரங்களில், கண்ணை மூடிக்கொண்டு காமராசரைப் பின்பற்றினால், எல்லாம் சரியாக நடக்கும்” என்று கூறக் கேட்டது என் நினைவுக்கு வந்தது; தெம்பும் வந்தது. “நல்லதைத் தொடங்குவோம்; வெற்றி தோல்வியை மற்றவர்க்கு விட்டுவிடுவோம்” என்று துணிந்தேன். இரண்டொரு நாள் பொறுத்திருந்தேன். கல்வித்துறை அலுவலர்கள் வாயிலாக, நாகலாபுரம் செய்தி பற்றி ஏதும் வரவில்லை. தனிக் கடிதம் அலுவல் பற்றியல்லாது தனிப்பட்ட முறையில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கே. வெங்கட சுப்பிரமணியத்திற்குக் கடிதம் எழுதினேன். “நாகலாபுரம் பாணியில், பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டம் நடத்தலாம் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடைக்கு மென்றும் முதலமைச்சர் நம்புவதை அவருக்குத் தெரிவித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/270&oldid=788056" இலிருந்து மீள்விக்கப்பட்டது