பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நினைவு அலைகள் "நான் குறிப்பிடும் நாகலாபுரம் தெற்கே, கோவில்பட்டி தாலுக்காவில் இருக்கிறது. அவ் வூர்க்காரர் எடுத்துக் கொண்டால், பகல் உணவை நன்றாக நடத்துவார்கள்” என்றார் காமராசர். “வேறு ஊர்களில் பலிக்கும் வாய்ப்பு இருக்கிறதுங்களா?” என்றேன். “இருக்கிறது. இருக்கிற கஷ்டம், ஊராரை மதித்து, அவர்கள் ஆற்றலுக்கு ஏற்ற திட்டங்களை ஊர்தோறும் சொல்ல, ஆள் இல்லாமைதான். “நல்ல அலுவலர்கள் கூட, கோப்புகளைப் பார்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களே ஒழிய, மக்களிடம் செல்லத் தயங்குகிறார்கள்” என்று கோடு காட்டினார் முதலமைச்சர். கிங் H ெ s -- ଗ . - ■ 語 L. 圖 .2” e அய்யா சொல்வதைச் செய்து பார்க்கட்டுங்களா? என்று கேட்டேன். “நன்றாகச் செய்யுங்கள்; பல ஊர்களில் பலிக்கும். அதுவும் கோவில்பட்டி பக்கம் சட்டென்று பிடித்துக் கொள்ளும். எந்த ஊராவது செய்யவில்லை என்றால், என்னிடம் சொல்லுங்கள்” என்று ஆணையிடும் வேளை மேடையண்டை வந்துவிட்டோம். நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. முதலமைச்சரை வழி அனுப்ப, பெருமாள் முதலியாரும் நானும் வந்தோம். கார் ஏறும்போது, என் பக்கம் திரும்பி “ஊர்க்காரரே சோறும் போடலாமென்று நாலு ஊர்களுக்கும் போய்ச் சொல்லுங்கள்” என்று மகிழ்ச்சியோடு காமராசர் கூறினார். கார் நகர்ந்ததும் ஒரு வினாடியும் பொறுக்காமல், “உங்களுக்குச் சரியான சுமையை வைத்திருக்கிறார்” என்றார் பெருமாள் முதலியார். நான் வாய் திறக்கவில்லை. கல்வி அமைச்சரின் கருத்து அடுத்த நாள் காலை முதல் வேலையாக, கல்வி அமைச்சர் திரு. சுப்பிரமணியத்தை அவர் இல்லத்தில் கண்டேன். முதலமைச்சர், என்னிடம் கூறியவற்றைக் கிளிப்பிள்ளைபோல், கூறினேன். நான் சொல்லி முடித்ததும் "உங்கள் நிலைமை சங்கடமானது. முதலமைச்சர் சொன்னதைச் செய்யாவிட்டால் உங்கள் பதவிக்குக் கேடு வரலாம். செய்தால் கெட்ட பெயர் வரலாம். எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/269&oldid=788054" இலிருந்து மீள்விக்கப்பட்டது