பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவு அலைகள நள்ளிரவில் வந்த தொலைபேசி இப்படி இருக்கையில், ஒர் இரவு பதினோரு மணிக்குமேல் என் வீட்டுத் தொலைபேசி அலறிற்று. என் மனைவி காந்தம்மா விழித்துக் கொண்டார். தொலைபேசி யை எடுத்தார்; பேசினார். "கோவில்பட்டியில் இருந் து கூப்பிடுகிறோம். கல்வி இயக்குநர் நெ. து. சு.வோடு நேரில் பேச வேண்டும். இந்த நேரத்தில் கூப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும்” என்று எவரோ, கோவில்பட்டி முனையில் பேசினாராம். அன்று. முதலமைச்சர் காமராசர் கோவில்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருப்பது தெரியும். 'அவர் எதற்காகவாகிலும் அவசரமாகக் கூப்பிடுகிறாரோ என்னவோ? தொலைபேசியில் நீங்கள் பேசிவிடுவது நல்லது என்று எழுப்பினேன்’ என்று, காந்தம்மாவிளக்கம் கூறினார். - கண்களைத் துடைத்துக்கொண்டு, தொலைபேசியில் பேசினேன். 'அய்யா! இந்த நேரத்தில் கூப்பிட்டுத் தொல்லை கொடுப்பதற்காக என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன். 'இப்போது பயணிகள் விடுதியில் இருந்து அஞ்சல் நிலையம் வந்து பேசுகிறேன். பேசி முடித்ததும் விடுதிக்குத் திரும்ப வேண்டும். “முதலமீைச்சர் இன்று முழுதும் இவ் வட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இரவு பத்தரை மணிக்குத்தான் விடுதிக்கு திரும்பி வந்தார். “பதினோரு மணிக்கு, காங்கிர்சு ஊழியர் கூட்டம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. --- “மாவட்ட ஆட்சித் தலைவர், மற்ற மாவட்ட அலுவலர்கள், நான் உட்பட, பகல் எல்லாம் முதலமைச்சரோடு போனோம். இப்போது விடுதித் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறோம். “தொண்டர்கள் கூட்டம் இரகசியமானதல்ல, உள்ளே பேசுவது வெளியே இருக்கும் எங்களுக்கும் கேட்கிறது "இப் பகுதியில் நடக்கும் நல்லது கெட்டது பற்றிப் பலர் விவரமாக எடுத்துக் கூறிவந்தார்கள் “கட்சி நடவடிக்கைகளை மட்டும் அல்லாது, பொது நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துக் காட்டினார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/273&oldid=788059" இலிருந்து மீள்விக்கப்பட்டது