பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சை எடுக்கவும் தயார் 235 நெ. து. சு. வரவேண்டும் "அப்படிச் சொல்லி வருகையில், இரண்டொருவர், சில ஊர்களில், ஊர்க் குழு அமைத்து, பள்ளிகளில் பகல் உணவுக்காக அரிசி திரட்டி வைத்து இருக்கும் புது பற்சியைப் பற்றிச் சொன்னார்கள். "வசூல் போதவில்லையா? ஏன், பள்ளிப் பகல் உணவைத் தொடங்காமல் காலதாமதம் செய்கிறார்கள் என்று முதலமைச்சர் கேட்டார். “அதற்கு இள்ைளுர் ஒருவர், பளிச்சென்று பதில் கூறிவிட்டார். “களத்துமேட்டு அளவையின்போதே தானியம் ஒதுக்கி வைத்து, சேர்த்து, ஊர்ப்பொதுவில் பள்ளியில் உணவு அளியுங்கள் என்று புதிதாக வந்துள்ள இயக்குநர் தான் சொன்னாராம். "அவரே வந்து, இப் பக்கத்து உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும். அவரை நேரில் பார்க்க வேண்டும். அவர் பேச்சைக் கேட்க வேண்டும். அவருக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்கள். அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று இளந்தொண்டர் ஒருவர் கூறினார்.” இச் செய்தியைக் கேட்டபோது, என் கை கால்கள் தந்தியடித்தன. ஏன்? so எனக்கு ஏற்பட்ட அச்சம் 'முதல்மைச்சரை அழைக்காம்ல், அவரது ஊழியன் ஒருவரை அழைப்பதும், அவருக்காகவே காத்திருக்கிறேனென்று முதலமைச் சரிடமே சொல்வதும், தெரியாத்தனத்தால் எனக்குப் பகையைத் கேடித்தருவதாக, முடிந்துவிடுமோ? என்று அஞ்சினேன். H மன்னர் விழைவதைத்தான் விழைவது, பெருங்கேடாகுமோ! “நாமே விழையாதபோதும், பிறர் திணித்து, முதலமைச்சரோடு எனக்குள்ள உறவைக் கெடுத்துவிட்டார்களே என்று பதற்றம் கொண்டேன். - o கோவில்பட்டி முனையில் பேசுபவருக்கு என் உணர்வு தெரியாது. எனவே பேச்சை நீட்டினார். “தங்கள் வருகைக்காகப் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டதும், முதல் அமைச்சர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/274&oldid=788060" இலிருந்து மீள்விக்கப்பட்டது