உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவு அலைகள் "அதுவும் சரித்ான். அவருக்கு நிறைய வேலை! இருப்பினும் நான் சென்னைக்குப் போனதும் இயக்குநரிடம் பேசி, விரைவில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் முன்னேற்பாடுகளைச் சரியாகச் செய்துவிட்டுத் தயாராக இருங்கள் என்றார். “முதலமைச்சர், சென்னை வர, இரண்டு நாள்கள் ஆகும். அதற்கு முன்பே தங்கள் காதில் போட்டுவிட வேண்டும் என்பதற்காக், இந்த அகாலத்தில் எழுப்பிப் பேசினேன். மன்னித்துவிடுங்கள்” என்றார். - இவ்வாறு யார் சொன்னார்? திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலரான திரு. கி. வெங்கட சுப்பிரமணியம் சொன்னார். -- அவர் பேசிக் கொண்டிருக்கையிலே, தொலைபேசியில் ஒரு 'நீடிப்பு’ கேட்டார். நானும் செய்தியைக் கேட்டுக் கொண்டேனே ஒழிய, குறுக்குக் கேள்வி கேட்கவில்லை. அதனால் ஒரு மூன்று நிமிட நீடிப்போடு பேச்சு முடிந்தது. இந்தச் செய்தியை, காந்தம்மாவின் காதில் போடாமல் இருக்க முடியுமா? நமக்குள் என்று சொல்லி வைத்தேன். காமராசர் அழைத்தார் காமராசரின் சென்னை வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் திரும்பிய அன்றே, காலதாமதமின்றி எனக்கு அழைப்பு வந்தது. o அக் காலம் முதல், இக் காலம் வரை, கூடிய வரையில் நானே தொலைபேசியை எடுப்பேன். அதன்படி, தொலைபேசி மணி ஒலித்ததும் பேச்சு வாங்கியைக் கையில் எடுத்தேன். முதல்வர் முந்திக் கொண்ட்ார். - “காமராஜ்பேசுகிறேன். இப்பதான் கோவில்பட்டி பக்கமிருந்து திரும்பிவந்தேன். உங்களோடு நேரில் பேசனும், வீட்டுக்கா, கோட்டைக்கா எங்கே, எப்போது வர முடியும்?” என்று அவர் என்னைக் கேட்டார். “தங்களுக்கு வசதியானால், இப்போதே பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து காண்கிறேன்” என்றேன். முதலமைச்சர் அதற்கு இசைந்தார். அக் கால சென்னை மாநகரத் தெருக்களில் போக்குவரவு நெரிசல் குறைவு. எனவே, உரிய நேரத்தில் முதலமைச்சர் வீடு போய்ச் சேர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/275&oldid=788061" இலிருந்து மீள்விக்கப்பட்டது