உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சை எடுக்கவும் தயார் 237 மாடி அறையில் அமர்ந்திருந்த முதலமைச்சர், என்னை அங்கே வார் சொன்னார். அப்படியே சென்றேன். எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார். “கோவில்பட்டி பக்கம் மூன்று நாள் சுற்றிவிட்டு வருகிறேன். அங்கே, ஏழெட்டு ஊர்களில் பள்ளிப் பகல் உணவு போட, எல்லா யற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை அழைத்திருக்கிறார்களாம். "நீங்கள் உடனே போக முடிந்தால் அதை உடனே தொடங்கிவிடலாம். எவ்வளவு விரைவாகப் போக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள். அதைப் பார்த்து மற்ற ஊர்க்காரர்களும் ஏற்பாடு செய்ய முன் வருவார்கள்” என்று முதலமைச்சர் இனிமையாகக் கூறினார். “ஆம் տյաաո: இச் செய்தி முதலில் வந்தபோது பொறுத் திருந்து பார்ப்போம் என்று தள்ளி வைத்தேன். ஏழெட்டு ஊர்களில் ஏற்பாடுகள் செய்துவிட்டதைக் கேட்டதும், இந்த முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் அவர்களே தொடங்கினால்தான், எதிர்காலம் நன்றாயிருக்கும் என்று தோன்றிற்று “எனவே, பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஊக்கப்படுத்த, தங்களை அழைப்பது என்று முடிவு செய்தேன். அழைப்பதற்குள் தாங்களே அழைத்துவிட்டீர்கள். “தயவுசெய்து, கூடிய விரைவில் மீண்டும் தாங்கள் கோவில்பட்டிக்கு வந்து, பல ஊர் பகல் உணவு மையங்களைத் தொடங்கி வைக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். இது

ஆசிரியர்கள், பொதுமக்கள் எல்லாருடைய ஆவல். * “தாங்கள் எவ்வளவு குறுகிய அறிவிப்பு கொடுத்தாலும், ஆயத்தமாக இருக்கிறோம். தயவுசெய்து நாள் கொடுங்கள்” என்று முதலமைச்சரை வேண்டினேன். ஆசிரியருக்கு இயக்குநரே எல்லாம் முதலமைச்சர் என்னை மட்டுமே புகழ் மேடைக்குத் தள்ளிவிட முயன்றார். “நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒன்று. “காவல்துறைக்காரர். பார்வை, அவருடைய மேலதிகாரி மேல்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு அய் ஜியே மேலதிகாரி - எல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/276&oldid=788062" இலிருந்து மீள்விக்கப்பட்டது