பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நினைவு அலைகள் "அதேபோல், ஆசிரியர்களுக்கு இயக்குநரே எல்லாம்! உங்கள் கடைக்கண் பார்வை அவர்களுக்கு ஆணை. = "நான் அய் ஜிக்கு ஆணையிடலாம். அவரோ கீழே இருப்பவர்களுக்கு ஆணையிட வேண்டும். நான் உங்களுக்கு ஆணையிடலாம். நீங்கள் மட்டுமே உங்கள் அலுவலர்களுக்கு ஆணையிட வேண்டும். "ஆசிரியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரிதான். அவர்கள் ஆசைப்படி நீங்கள் போய் முதலில் இரண்டொரு ஊர்களில் தொடங்கி வைத்துவிடுங்கள். "இதை எத்தனையோ ஊர்களுக்கு பரப்பப் போகிறீர்கள், அவ்வூர்களில் நான் கலந்து கொள்கிறேன்” என்றார். "ஐயா சொல்வதற்கு எதிராக நான் சொல்லவில்லை. தனியாகப் போவதற்குப் பதில், தாங்கள் போகும்போது. தங்களோடு வருகிறேன். தாங்கள்தான் பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்றேன். காமராசர் இசைந்தார் காமராசர், மனம் இளகின்ார்: இசைந்தார். சில வாரங்களிலேயே, கோவில்பட்டியில் மீண்டும் பயணம் செய்து, பகல் உணவுத்திட்டத்தைத் தொடங்கி வைக்க ஒப்புக் கொண்டார். என் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? கல்வி அமைச்சரிடம் தெரிவித்தேன். முன்னோடித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் உரிமை பெற்றேன். காலதாமதம் செய்யாமல், முதலமைச்சர் காமராசர் நாள் கொடுத்தார். எட்டயபுரத்தில் தொடக்கம் கோவில்பட்டிப் பகுதிக்கு மூன்று நாள் ஒதுக்கினார். பத்துப் பகல் உணவு மையங்களைத் திறப்பதாகத் திட்டம் எங்கே முதலில் தொடங்குவது? எட்டயபுரத்தில் தொடங்குவது? 'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்’ என்று வழிகாட்டிய பாரதி பிறந்த ஊரில் தொடங்குவதாக முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/277&oldid=788063" இலிருந்து மீள்விக்கப்பட்டது