உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சை எடுக்கவும் தயார் 241 பின் என்ன சொன்னார்? “இப்போது நாம் சுதந்தரம் பெற்று இருக்கிறோம். நாம் பிறருக்கு அடிமை அல்ல; எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயருக்கு வவல் செய்யப் போவதில்லை. "இந்தச் சுதந்தரம் சும்மா கிடைத்துவிடவில்லை. அரும்பாடு. | lட்டு வாங்கி இருக்கிறோம். மகாத்மா தலைமையில் அவர் சொன்னபடி கேட்டதால், நமக்கு ஆட்சி உரிமை வந்தது. அதாவது பலஇலட்சம் பேர்கள் - ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் தியாகம் செய்ததால் விடுதலை கிடைத்தது. “யாருக்காக விடுதலை வாங்கின்ோம்? நானோ, வேறு சிலரோ முதலமைச்சர் பதவி பெற அல்ல, இந்தியாவில் சில நூறுபேர்களுக்கு அமைச்சர் வேலை கிடைப்பதற்காக அல்ல. சில ஆயிரம் பேர்கள் சட்டமன்றங்களுக்குச் சென்று பெருமை பெற அல்ல. அய்ந்நூறு அறுநூறு பேர்களுக்கு நாடாளு மன்றத்தில் இடம் பிடிக்கவா இத்தனை இன்னல்; தொழில் இழப்பு - உயிர் இழப்பு ல்லாம்?. “எதற்காக விடுதலை தேவை என்பதை மகாத்மாவே, நமக்குக் காட்டி விட்டுப் போயிருக்கிறாரே! கடையரும் கடைத்தேற அல்லவா விடுதலை! * - "கடையர் எப்படிக் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றால் தேறுவார்கள். படிக்கிற கல்வியால் அறிவும் திறமையும் வளர்ந்தால், பிழைத்துக் கொள்வார்கள்; மனிதர்களாக வாழ்வார்கள். கால்லார்க்கும் கல்வி "ஆனால், பெரும்பாலோருக்கு எழுத்தறிவே கிடையாது? பாரில் பள்ளிக்கூடமே இல்லாதபோது எப்படி எழுத்தறிவு வரும். ம் முதல் வேலை எல்லா ஊர்களுக்கும். பள்ளிக்கூடம் வைத்தல், ல்லார்க்கும் கிடைக்கும் வகையில் கல்வியை இலவசமாக்குதல். "வீட்டுப் பக்கத்திலேயே நிலம்: ஈரமிருந்தால் பயிரிடலாம். காய்ந்து கிடந்தர்ல் எதைப் பயிரிடுவது? பிள்ளைகள் வயிறு காய்ந்திருக்கையில், பாடம் சொல்லிக் கொடுத்தால், பாடமேறுமா? “நாட்டில் ஏழைகள் மலிந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். 'முடிந்த அளவு விரைவாக, எல்லோருக்கும் வேலையும் சாப்பாடும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/280&oldid=788067" இலிருந்து மீள்விக்கப்பட்டது