பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நினைவு அலைகள் வீட்டின் மூத்த இளம்பெண், பூசைவேளையில் விளக்கேற்றி வைப்பதுபோல், தொடங்கி வைத்தேன். - குறிப்பிட்டபடி, மறுநாள், முதலமைச்சர் காமராசர், கோவில்பட்டி வந்து சேர்ந்தார். அன்றைய முதல் நிகழ்ச்சி என்ன? பாலம் ஒன்றிற்கு அடிப்படைக் கல் நாட்டுதல், அப் பணியைப் பெருந்தலைவர் காமராசர் ஆற்றினார். எதற்குப் பாலம்? வைப்பாற்றிற்குப் பாலம். அந்த ஆறுதான். அன்றைய இராமநாதபுர மாவட்டத்திற்கும் நெல்லை மாவட்டத்திற்கும் எல்லையாக அமைந்திருந்தது. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை சாலையில் உள்ளது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த ஊரில் பகல் உணவுத் தொடக்கவிழா. எனவே, நான் முதல் நிகழ்ச்சிக்கே சென்றேன். அலுவலக உடையில் அல்லாது வேட்டி, சிப்பாவோடு, நிகழ்ச்சிக்குச் சென்றேன். அந்த நிகழ்ச்சிக்குப் பொறுப்பான, நெடுஞ்சாலைத் தலைமைப் பொறியாளர், திரு. கே. நம்பியார், என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவர். சென்னை மாநகராட்சியில் நான் அலுவல் பார்த்தபோது, அங்குப் பொறியாளராக இயங்கியவர். பழக்கம் பற்றி, "இப்படி வந்துள்ளதற்காக, முதலமைச்சர் உங்கள் மேல் கோபங்கொள்ளமாட்டாரா?” என்று என் காதோடு கேட்டார். "பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு, அவையில் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். விழா உரிய நேரத்தில் தொடங்கிற்று. முறைப்படி எல்லாச் சடங்குகளும் நிறைவேறின. முதலமைச்சரின் உரைக்காக உடலெல்லாம் காதாகக் காத்திருந்தோம். மூன்று நான்கு மணித்துளிகள் பீடிகை போட்டார். சுதந்தரத்தின் பெருமை பின்னர், நேருக்குநேர் அவையோருடன் பேசத் தொடங். கினார். சாலையின் தேவை - சாலை மேம்பாட்டிற்கு அரசு செய்யும் முயற்சி - இவை பற்றிப் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/279&oldid=788065" இலிருந்து மீள்விக்கப்பட்டது