பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 நினைவு அலைகள் ”அவர்கள் ஆசையைக் கர்ட்டிவிட்டார்கள். நான் இருப்பதா?. போவதா என்று எனக்குக் கட்டளையிட உங்களுக்குத்தான் உரிமை உண்டு” என்று காமராசர் உரைப்பார். மக்களோடு நெருக்கம் மேற்படி பேச்சு, காமராசரை மக்களுக்கு மேலும் நெருக்கமான வராக்கிவிட்டது. அது, பகல் உணவுத் திட்டத்திற்கு ஆதாயமாகி விட்டது. எவ்வளவு பெரிய மனிதர், நம்மைத் தேடி வந்து ஊரார் வீட்டுப் பிள்ளைகளுக்காகப் பிச்சை கேட்கப் போகிறேன் என்கிறார். 'அவர் போய்விட வேணுமென்று நினைப்பவர்கள் நன்றாயிருப்பார்களா?” இப்படிக் கேட்டார்கள் பொதுமக்கள்! புதிய பகல் உணவுத் திட்டத்தை ஆர்வத்தோடு ஆதரிக்க முன் வந்தார்கள். - என்னைப் பொறுத்தமட்டில், ஒன்றில் தெளிவாக இருந்தேன். அரசின் திட்டமா? இது அரசின் திட்டமல்ல! அரசால் வகுக்கப்பட்ட விதிமுறை கள் இல்லை. -- எனவே, இதுபற்றி எவ்வித ஆணையும் பிறப்பிக்கவே இல்லை. மேலும் மேலும் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்குங்கள் என்று நேரிலோ, எழுத்து வழியாகவோ எவருக்கும் கட்டளை இடவில்லை. எந்த அலுவலராவது நேரில் கண்டு கேட்கும்போதும், இது கல்வி அமைச்சருக்கு உடன்பாடானதல்ல என்பதைச் சாடை யாகவும் காட்டவில்லை. "தமிழ்நாட்டு மக்கள் இயல்பு தெரிந்தவர் நம் முதலமைச்சர். அவர் இத் திட்டம் பரவும் என்று நினைக்கிறார். அவரது மதிப்பீட்டில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்கெங்கு ஊராரே முயற்சி எடுப்பதாகக் கேள்விப்படுகிறீர்க்ளோ, அங்கங்குச் சென்று கணக்கு வழக்கு வைப்பது பற்றிக் கூறுங்கள் “ஊரார் முப்பது பேர்களுக்கு உணவளிக்கிறோம் என்றால், அதை நாற்பது ஆக்குங்கள் என்று ஆர்வத்தின் காரணமாகவும் எவரையும் நெருக்காதீர்கள்' - இப்படிக் கோடு காட்டிக் காத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/285&oldid=788072" இலிருந்து மீள்விக்கப்பட்டது