பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவாயிரம் ஊர்களில் பகல் உணவுத் திட்டம் - 247 எட்டயபுரப் பகுதியில் மூன்று நாள் தொடர்ந்து நடந்த பகல் உணவு விழாக்கள் பற்றி, பல நாள்கள்வரை செய்தித் தாள்களில் செய்திகள் வந்தன. நிழற் படங்களும் வெளியாயின. செய்தித் துறையின் பாராமுகம் விவரம் தெரிந்த பொதுமக்களுக்கு ஒரு குறை. அதுபற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டதோடு, என்னிடமும் சிலர் கேட்டனர். "தனியார் நடத்தும் செய்தித் தாள்கள் பகல் உணவுத் திட்டம் பற்றிப் படங்கள் வெளியிட்ட அளவு, சென்னை அரசின் தகவல்துறை அக்கறையோ, ஆர்வமோ காட்டவில்லையே. “இவ்வளவு புதுமையான திட்டத்தை உரிய அளவு பெரிதாக விளம்பரப்படுத்தாமல் எதற்கு அய்யா அரசிற்குச் செய்தித்துறை?” நான், இக் கேள்விகளுக்குப் பதில் கூறினது இல்லை! 'சீப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால், திருமணம் நின்று போகுமா? அதுபோல, சென்னை மாநில செய்தித் துறை, பள்ளிப் பகல் உணவுத் திட்டம் பற்றி, பாராமுகம் காட்டினாலும் மற்ற செய்தி இதழ்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ, இதுபற்றிச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருந்தன. 'தினத் தந்தி'யின் தொண்டு பள்ளிப் பகல் உணவுத் திட்டம், அதிலிருந்து கிளைத்த சீருடைத் திட்டம், பள்ளிச் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து. கொடுத்ததில் தினத் தந்தி நாளிதழ் முதலிடம் பெறுகிறது. இவையன்றி, கல்வி பற்றி நான் எவ்வளவு கடைக்கோடி ஊரில் பேசினாலும் அது விரிவாக 'தினத் தந்தி’யின் எல்லாப் பதிப்புகளிலும் வெளியாகும். என் பேச்சில் இங்கொரு சொல்லோ அங்கொரு சொல்லோ, மாற்றிவிட்டோ விட்டுவிட்டோ, தவறான பொருள்படும்படியோ 'தினத் தந்தி வெளியிட்டதில்லை. - இத்தனைக்கும் எனக்குத் தினத்தந்தி ஆசிரியரும் உரிமை யாளருமான திரு. சி. பா. ஆதித்தனாரோடு அப்போது அறிமுகங்கூட கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/286&oldid=788073" இலிருந்து மீள்விக்கப்பட்டது