பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 - நினைவு அலைகள் அப்படியே நடந்தது. தொடக்க நாள் அன்று ஆதிதிராவிடப் பிள்ளைகள் மட்டுமே உண்டார்கள். மிஞ்சிய உணவை, ஏழை முதியவர்களுக்குத் தானம் செய்துவிட்டார்கள். அடுத்தநாள் காலை எட்டு மணிக்கே என்னைக் காண வந்தார். அவருக்கே உரிய கெட்டிக்காரத்தனத்தோடு, கீழ்க் குரலில், நல்ல செய்திகள் சிலவற்றைக் கூறினார். இயக்குநர் வந்து, தொடங்க வேண்டுமென்று காத்திருப்பதாகப் பல ஊர்களின் பெயர்களைச் சொன்னார்; விழாவிற்கு நாள் கேட்டார். மயக்க மருந்தைக் கொடுத்துவிட்டு, அறுவை மருத்துவம் பார்ப்பவர்போல், “எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நடக்கக்கூடாதது ஒன்று நடந்தது. அதுவும் நெய்யாடிவாக்கத்தில் நடந்துவிட்டது. -- “அரசுக்கு ஆகாதது மட்டுமல்ல, தங்களுக்கும் வெறுப்பானது நடந்துவிட்டது” என்ற முன்னுரையோடு முந்தைய நாள், என் சொந்த ஊரில், பகல் உணவுத் தொடக்க விழாவில் ஏற்பட்ட சலசலப்பை, தயங்கித் தயங்கிக் கூறினார். "திடீரென முளைத்த இந் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் வந்துவிட்டதற்காக, எப்படி மன்னிப்புக் கோருவது என்று தெரியவில்லை” என்றார். அரசின் திட்டத்திற்கு மாறாக இப்படி நடந்தது பற்றி எனக்கு ஒருகணம் வெகுளி பொங்கிற்று. ரயான் பாணியைப் பின்பற்றினேன். தாழ உரைத்தேன். ற էՔ த + ஏன்? நடந்தது பெருங்கேடுதான். இன்னும் மலையளவு நடக்க வேண்டியதாக இருக்கிறதே! அதற்கு ஆர்வம் வேண்டுமே! இத்தகைய எண்ணங்கள் மின்னியதும். "இந் நிகழ்ச்சி தானாகப் பெரிதாகும்வரை, நாலுபேருக்குச் சொல்லர்தீர்கள். வழக்கம்போல், புதிய பள்ளிக்ளைத் திறத்தல் மாணவர் சேர்க்கையைக் கூட்டுதல், புதிய ஊர்களில் பள்ளி உணவுத் திட்டத்தைத் தொடங்கல், ஆகியவற்றில் பழையபடியே முனைப்பாயிருங்கள்” என்று வழி காட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/305&oldid=788094" இலிருந்து மீள்விக்கப்பட்டது