பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 31. சமத்துவச் சங்கின் (முழக்கம் கேட்டேன் இரயானின் கலக்கம் “உண்ண மாட்டோம். ஆதிதிராவிடப் பிள்ளைகளோடு உட்கார்ந்து உண்ணமாட்டோம்” இப்படி, மானுடப் பிஞ்சுகள் கூறியது ஊராருக்கு அதிர்ச்சியூட்டவில்லை. ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர், திரு. ஜே. ஏ. இரயானை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் தள்ளிற்று அதிர்ச்சியிலும் அச்சமே மேலோங்கியது. --- “இதுவரை, இம் மாவட்டத்தில் பல மையங்களில், இயக்குநரே, பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். எங்கும் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதில்லை. உண்பதில் தீண்டாமையை இங்கேதான் காண நேர்ந்தது. “இதைச் சரி செய்து, எல்லோரையும் ஒரே பந்தியில் உட்கார வைத்துப் பரிமாறாமல், நான் போய்விட்டால் எனக்குத் தீங்கு வரும். “முதலில் இயக்குநர் என்னை கிட்டச் சேர்க்கமாட்டார். இதுவரை நான் எவ்வளவு வேண்டியவனாக இருந்தும் இதை மன்னிக்கமாட்டார்; கடுமையாகிவிடுவார். இப்படி இரயான் என் தந்தையிடம் புலம்பினார். என் தந்தை பதறவில்லை. “நீங்கள் சொல்லுவது புரிகிறது! அதற்கு மேலும் புரிகிறது. உங்கள் இயக்குநர், சமத்துவத்திற்காக என்ன விலையும் கொடுக்கக்கூடியவர் என்பது உங்களுக்குத் தெரிந்ததைவிட, எனக்கு நன்றாகத் தெரியும். “அதைவிட இயக்குநர் நெ. து. சு. சிடுசிடென நடிப்பார். ஆனால் எவரையும் கெடுக்கமாட்டார் என்பதும் எனக்குத்தான் தெரியும். “எனவே, இன்றைய நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்த வேண்டாம். ஏதும் நடவாதது போலவே, உங்கள் வேலையைப் பாருங்கள். “இதுபற்றி ஏதாவது. உங்களை விளக்கம் கேட்டால், அப்போது உடனுக்குடன் என்னிடம் தெரிவியுங்கள். “கட்டி பழுத்தால், எளிதாகக் கீறிக் குணப்படுத்திவிடலாம். நீங்கள் கவலைப்படாமல், உண்ண உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பரிமாறுங்கள்” என்றார் நெ. ச. துரைசாமி அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/304&oldid=788093" இலிருந்து மீள்விக்கப்பட்டது