உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 - நினைவு அலைகள் அன்று எங்கள் ஊரில் மத்தவர், என் தந்தை திரு. நெ. அர். துரைசாமி. விழா நடத்த எவரை அழைப்பது என்று அவரைக் கேட்டனர். “மாவட்டக் கல்வி அலுவலர் திரு. ஜே. ஏ. இரயானை அழைத்தால் போதும். அவருக்கு மேல்நிலையில் உள்ளவர்களை அழைப்பது ஆடம்பரமாகும்” என்று அவர் கூறினார். அதை ஊரார் ஏற்றுக்கொண்டார்கள். விழாவிற்கு நாள் குறிப்பிட்டார்கள். விழாவிற்குத் தலைமை தாங்க என் தந்தையும், உணவுத் திட்டத்தைத் தொடங்குவது இரயான் என்றும் ஏற்பாடு செய்தார்கள். சமபந்தி உணவா? பெயர் கொடுத்த நாற்பது குழந்தைகளுக்கு உணவு சன்மைக்கப்பட்டது. i விழா தொடங்கிற்று. சுருக்கமான உரைகளுக்குப்பின், உணவு பரிமாறும் விழா விற்காக, 'பகல் உணவு தேவைப்படும் சிறுவர் சிறுமிகளை வரிசையாக உட்காரும்படி தலைமையாசிரியர் கட்டளையிட்டார். கூடி உட்கார்ந்திருந்தவர்கள், வரிசையாக அமர்ந்தார்கள். அப்படி உட்கார்ந்தவர்கள் பதினாறு பேர்களே. மற்றவர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் பந்தியில் சேர்ந்து உட்கார மறுத்துவிட்டார்கள். ஏன் என்று கேட்டபோது, விளக்கம் கூறினார்கள். விளக்கம் என்ன? எங்களுக்குப் பகல் உணவு வீட்டில் இல்லை. எனவே ஆசிரியரிடம் பெயர் கொடுத்தோம். மாலை வீடு சென்றபோது அதைப் பெற்றோரிடம் தெரிவித்தோம். அப்பா, அம்மா கோபித்துக்கொண்டார்கள். "புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?. மட்டமான சாதிப் பையன்களோடு உட்கார்ந்து, சாதியைக் கெடுக்க வேண்டாம். மீறிச் செய்தால் தோலை உரித்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். "அவர்கள் சொல்லை மீறி ஆதி திராவிடர்களோடு சாப்பிடமாட்டோம்!” இதுவே விளக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/303&oldid=788092" இலிருந்து மீள்விக்கப்பட்டது