உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டம்-அரசு_ஆனை பிறந்தது 263 தவறு நடக்காமல், பொதுமக்கள் கவனித்துக் கொண்டனர். அரசின் நிதி உதவி, அத் திட்டத்திற்கு உரமாயிற்று. சமையல் 'பண்டங்கள் சில உள்ளூரில் கிடைத்தாலும், பணமும் வந்ததால், வள்வித இடையூறுமின்றி உணவு மையங்கள் செயல்படத் தொடங்கின. உணவுப் பொருள்களை எங்கே பத்திரப்படுத்தி வைத்தார்கள்? இடவசதி உள்ள சில பள்ளிகளில்; பள்ளியிலேயே வைத்திருந்தார்கள். பல பள்ளிகளில் இடவசதி இல்லை. அச் சூழலில், குழுவின். முடி வுப்படி, தலைவர் வீட்டிலோ, செயலர் வீட்டிலோ, வேறு ஒரு செயற்குழு உறுப்பினர் வீட்டிலோ பத்திரப்படுத்தி வைக்க விதி இ கொடுத்தது. பொருள்கள் கையாடப்பட்டனவா? இல்லை. நிதி கையாடப்பட்டதா? இல்லை. ாரிப்பது பேர்களுக்குச் சோறு போட்டுவிட்டு, ஐம்பது பேர்களுக்குப் போட்டதாகக் கணக்கு எழுதியது உண்டா? இல்ல்ை. புதுப்புது ஊர்களில் உணவு மையங்கள் தோன்றின; உள்ள மையங்களில் சேர்க்கை பெருகிற்று வருகை வளர்ந்தது; படிப்பில் கவனம் வளர்ந்தது. நெய்யாடிவாக்கத்திலும் இத் திட்டம் பிறந்தது இவற்றிலும் மேலான புரட்சிகரமான நன்மை ஒன்று விளைந்தது. அந்தப். பெருநன்மையைப் பச்சையாகவே சு டி க்காட்டி வந்தோம். பகல் உணவுத் திட்டம் அரசின் திட்டமான பிறகும் என்து பாகிய நெய்யாடிவாக்கத்தில் பகல் உணவுத் திட்டத்தைத் தெ பங்கவில்லை. ஆய்வாளர் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திய பிறகு, எங்கள் வளர்ப் பெரியவர்கள் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி நடத்த புவடி வு செய்தார்கள். - -- எத்தனை பிள்ளைகளுக்குப் பகல் உணவு தேவை என்று தலைமை ஆசிரியர் கணக்கு எடுத்தார். நாற்பது பேர்கள் பெயர் கொடுத்தார்கள்.அத்தனை பேருக்கும் வேண்டிய பொருள்களைத் திரட்டிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/302&oldid=788091" இலிருந்து மீள்விக்கப்பட்டது