உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவு அலைகள் 1957இல் இதைத் தொடங்கும்போது இருபத்திமூன்று இலட்சம் மாணவர்களே பள்ளியில் படித்தார்கள். அப்படியானால், தொடக்கத்திலேயே எட்டு இலட்சம் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆணை இட்டார்களா? இல்லை. எந்தெந்த ஊர்களில் சரியான குழுக்கள் அமைப்பதோடு, ஊரார் பங்கைப் பொருளாகவாகிலும் திரட்ட முடிகிறதோ, அந்தந்த ஊரில் தொடங்குவது என்பது மற்றொரு முடிவு. இப்படி, பகல் உணவுத் திட்டம் பற்றிய பல கேள்விகளை நான் எழுப்ப மாற்று நடைமுறைகளைச் சொல்ல, எதை அமைச்சர் ஆணையிட்டாரோ அதைக் குறித்துக்கொண்டே வந்தார், சுருக்க எழுத்தர். m _* இரண்டு மணி நேரத்தில் ஆணையின் முன் வடிவம் உருவாகிவிட்டது. அதைத் தட்டச்சு செய்து கொண்டு வந்து காட்டின்ார். மூவரும் ஒப்பிட்டுப் பார்த்தோம். முடிவுகள் சரியானபடி இருந்தன. அதற்கு நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்தார். ஒப்புதல் ஆணையிட்டது 1957 அக்டோபரில் 1.1.1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற, அரசின் நிதி உதவிக்குரிய ஒன்றாகிவிட்டது. ஏற்கென்வே தர்மர்கவே முளைத்து நடந்து வந்த பகல் உணவு மையங்கள் என்னவாயின? புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய திட்டத்தின் கீழ் வந்தன். அப்படி வந்தவை எத்தனை? நாலாயிரத்து இருநூறு மையங்கள். அத்தனையுமாகச் சேர்ந்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் மாணாக்கருக்குச்சோறு போட்டன. பள்ளிக்கு வந்து படிப்பவர்களுக்கே அத் திட்டம், ங் பஞ்சத்திற்குக் கஞ்சி ஊற்றும் திட்டம் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/301&oldid=788090" இலிருந்து மீள்விக்கப்பட்டது