உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டம், அரசு ஆணை பிறந்தது 251 பள்ளி ஆய்வாளர், பள்ளிக்கூடத்தின் மாணவர் எண்ணிக்கையில், மூன்றில் ஒருவர்வரை உணவளிக்க ஒப்புதல் தரலாம். அவ்வளவு பேருக்குத்தான் முடியும் என்பதால், மூன்றில் ஒருவருக்கு என்று முடிவு எடுக்கவில்லை. அக்கால கட்ட்த்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்தவர்கள் நூற்றுக்கு இருபத்தைந்து பேர்களே. எனவே, சில மார்களில் (புறப்பது விழுக்காட்டினருக்கு உணவு தேவைப்பட வில்லை. அப்படி மிச்சமாகும் எண்ணிக்கையை வறுமை மிகுந்த, அதிகம் பேருக்குத் தேவைப்படும் ஊருக்கு ஒதுக்கும் உரிமை, மாவட்டக் கல்வி அலுவலருக்கு உண்டு. இப்படிக் குறிப்பிட்ட எண்ணிக்கை பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஆண்டிற்குப் பன்னிரண்டு ரூபாய் வீதம் அரசு உதவும். அதை நான்கு தவணைகளில் தரும். முன் பணமாகவே தரும். இரண்டாம் தவணை நிதி உதவிக்கு முன்பு, முந்தைய காலாண்டுக் கணக்கை ஆய்வாளர் தணிக்கை பார்க்க வேண்டும். சமைக்க என்ன ஏற்பாடு? உள்ளுர்க் குழுவே ஏற்பாடு செய்து கொள்ளும். சிறு பள்ளியாயிருப்பின் தனி சமையல் ஆள் வைக்கமாட் டார்கள். பள்ளிக்கூடம் துப்புரவு செய்யும் ஆயா’வே சமைத்துப் பரிமாறிவிடுவார். பரிமாறும்போது ஆசிரியர் ஒருவரோ, இருவரோ உதவுவார். சமையல் செய்பவருக்கு உணவு உண்டு. பரிமாறும் ஆசிரியர்களும் அந்தச் சாப்பாட்டை உண்ணலாம். | lள்ளிக்கூடத்திலேயே சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை. பெரிய பள்ளியாயின், முழு நேர ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். ஊதியம் என்ன? வளருக்கேற்ப, வேலை பளுவுக்கேற்ப, உள்ளுர்க் குழுவே முடிவு செய்யும். == மொத்தத்தில் மூன்றில் ஒரு மாணாக்கருக்கு உணவு என்றால் சாத்தனை பேருக்கு? -- பதினைந்து இலட்சம் மக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/300&oldid=788089" இலிருந்து மீள்விக்கப்பட்டது