பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவு அலைகள் ஒவ்வோர் பள்ளிக்கும் ஒர் உணவு மையம் தேவையா? ஒரே கண்காணிப்பில் அருகில் பள்ளிகள் இருந்தால், ஒரே மையம் போதும். இரண்டாயிருந்தால் பிழையல்ல. பகல் உணவுக் குழுவின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? பணமாகவோ, பொருளர்கவோ நன்கொடை தருபவர்கள் பகல் உணவுக் குழுவின் உறுப்பினர்களாகலாம். நன்கொடை தராதவர்கள், எவ்வளவு பெரியவரானாலும் அத் திட்ட உறுப்பினராக முடியாது. எவ்வளவு நன்கொடை கொடுத்தால் உறுப்பினராகலாம்? - அதை உள்ளுர் மக்களே முடிவு செய்து கொள்ளலாம். அவர்களில் தலைவர், துணைத் தலைவர்கள், பொருளாளர், பிற செயற்குழு உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பனவற்றை நன்கொடையாளர் கூட்டம் முடிவு செய்து, உரிய பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும். குழுச்செயலர் மட்டும், அலுவல் பற்றியவரே யொழிய தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரே, பகல் உணவுக் குழுவிற்கு அலுவல் பற்றிய செயலர், ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் ஒரே மையமாக இயங்கினால், அத் தலைமை யாசிரியர்களில் ஒருவர், செயலராக, குழு நியமிக்கும். உணவுக் குழு ஆய்வாளர்ால் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அஞ்சல் வங்கியிலோ, வேறு வங்கியிலோ பகல் உணவுக் கழுவின், பெயரில் கணக்கு தொடங்க வேண்டும். பணமாக வரும் நன்கொடைகளை நேரே செலவு செய்யக்கூடாது. வந்த பணத்தை வங்கியில் சேர்த்துவிட்டு, அவ்வப்போது தேவையான நிதியை வாங்கிக் கொள்ளலாம். அரசின் நிதி உதவி எந்த அடிப்படையில்? மொத்த நடைமுறைச் செலவில், நூற்றுக்கு அறுபது விழுக்காட்டில், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துவிட்டு, உதவி கோரலாமா? - முடியாது. பாத்திரங்கள் வாங்க உதவி கிடைக்காது. நன்கொடையைக் கொண்டு வாங்க வேண்டும். ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/299&oldid=788087" இலிருந்து மீள்விக்கப்பட்டது