பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உ ண்வுத் திட்டம் அாக ஆனை oping 259 காமராசரின் பதில் முதலமைச்சர் வெகுளவில்லை. படித்துவிட்டு, பொறுமையாக, "பகல் உணவுத் திட்டம் நடக்கிறது. அரசு அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. செலவு செய்யவில்லை. தடுக்கவுமில்லை. இயக்குநருக்குக் கட்டுப்பட்டு நடத்துகிறார்கள். அப்புறம் அவர் பெயரில் அது நடந்தால் எப்படிக் கசந்து கொள்ளலாம்?” என்று நிதி அமைச்சர் காதில் விழும்படி கூறினார். அரசு ஆணை பிறந்தது சட்டமன்றப் பேரவையின் முற்பகல் நிகழ்ச்சி முடிந்தது. அவ் வேளை கல்வி அமைச்சர் சுப்பிரமணியமே தொலைபேசி வாயிலாக வன்னிடம் பேசினார். "பள்ளிப் பகல் உணவுத் திட்டம் பற்றிய அரசாணையை மூன்று நான்கு நாள்களிலாவது போட்டுவிட வேண்டுமென்று விரும்புகிறேன். அதைப் பற்றிய வரை வடிவத்தை நான்கு நாள். களுக்குள் தயாராக்கிவிட முடியுமா?’ என்று அமைச்சர் கேட்டார். 'அய்யா! அதுபற்றிச் சிந்தித்துப் பல படிகளாகப் பிரித்து டிவைத்துள்ளேன் “ஒவ்வொன்றிற்கும் இரண்டு மூன்று மாற்று முறைகளைக் குறித்துவைத்து இருக்கிறேன். "நாங்கள் அலுவலர்கள் உட்கார்ந்து பேசினால், முடிவே 1ற்படாது. தயவுசெய்து இரண்டு மணி ஒதுக்குங்கள். கல்விச் செயலரும் உடன் இருக்கட்டும். ங், ங் நான் படிகளைச் சுட்டிக் காட்டக் காட்ட, அதற்கான முறையை முடிவு செய்யுங்கள். இரண்டு மணிக்குள் ஆணை ஆயத்தமாகிவிடும்” என்றேன். "அப்படியே செய்வோம். கூட்டத்தை என்றைக்கு வைத்துக் கொள்ளலாம்?” என்று அமைச்சர் கேட்டார். “இன்றைக்கு வேண்டும் என்றாலும் கலந்து பேசலாம். என்றேன். அமைச்சர் ஒப்புக் கொண்டார். கோட்டையில் கல்வி அமைச்சர் அறையில் கல்விச் செயலரும் பொதுக் கல்வி இயக்குநரும் கூடிப் பேசினோம். அமைச்சர் முடிவு எடுத்தார். சுருக்கு எழுத்தர் அதைக் குறித்துக் .ெ ணடார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/298&oldid=788086" இலிருந்து மீள்விக்கப்பட்டது