உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவு அலைகள் எனவே, ஆங்காங்கே, இதைக் காமராசர் திட்டம்' என்று அழைப்பதற்குப் பதில், நெ. து. சு. திட்டம்’ என்று சொல்லத் தலைபபடடாாகள. முடிந்தவரை தடுத்துப் பார்த்தேன். பெரும்பாலும் பலித்தது. வடஆர்க்காடு மாவட்டத்தின் தலைநகரான வேலூரில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் பகல் உண்வுத் திட்டத்தைத் தொடங்க விரும்பினார்கள். தனியார் பள்ளிகளில் சோறுண்டு நகர்மன்றப் பள்ளிகளில் இல்லை என்ற நிலை கூடாது' என்று நினைத்தார்கள். பகல் உணவுத் திட்டம் நெ. து. சு. திட்டமா? நகரத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும்ாக ஒரு பொதுக் குழு நிறுவுவது என்று முடிவு செய்தார்கள். அப்போதைய நகர்மன்றத் தலைவர், திரு. கிருஷ்ணன். அவர் அப்பழுக்கு இல்லாதவர் என்ற நல்ல பெயர் எடுத்தவர். அவர் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்களும் தனி நிர்வாகிகளும் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. அக் குழுவின் பெயரால், நன்கொடை அருளுமாறு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அச்சடிக்கப்பட்ட வேண்டுகோளில் இயக்குநர் நெ. து. சு. வின் திட்டமாகிய பகல் உணவுத் திட்டத்திற்குத் தாராளமாக உதவுங்கள் என்று எழுதியிருந்தனர். அது முறைகேடு என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், எவரும் - மொட்டைக் கடித வாயிலாகவும் என் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை. அந்தத் துண்டு வெளியீட்டின் படி ஒன்றை, எவரோ ஒருவர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பினார். அவ்வுறுப்பினர் பெயர் எனக்குத் தெரியும். அவர் எவரானால், என்ன? , அவ் வுறுப்பினர் அவ் வெளியீட்டை முதலமைச்சரிடமோ, கல்வி அமைச்சரிடமோ கொடாது, வேறொரு அமைச்சரிடம் கொடுத்தார். அந்த அமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு, நெது. சு.திட்டம் என்று இருப்பதைக் கோடிட்டுக் காட்டி முதல்வரிடம் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/297&oldid=788085" இலிருந்து மீள்விக்கப்பட்டது