உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டம், அரசு ஆவி பிறந்தது 257 என்ன செய்தார்கள்? 'நடப்பது அரசு திட்டமல்லவே! அதற்காக ஒன்றும் அரசுக்குச் செலவாகவில்லையே, ஒதுக்கின நிதி, கிணற்றில் வீழ்ந்த கல்லாகத் தானே இருக்கிறது' என்று மடக்குவார்களோ 'அதன் விளைவாக அவசர கோலம் அள்ளித் தெளிப்பது போல, அணைபோட நேரிடுமோ என்று அஞ்சினேன். என் நற்பேறு, அதைத் தொடவில்லை. வேறு பக்கம் திரும்பிவிட்டார்கள். 'ஏழைக் குழந்தைகளுக்குச் சாப்பாடு போடுவதில் பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை. விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகள் ஆன பிறகும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஆட்சிக்கு அவமானம் திறமையான அரசாக இருந்திருந்தால் இதற்குள் வறுமை ஒழிந்து இருக்கும் இப் பாணியில் எதிர்க்கட்சியினரின் பேச்சுகள் இருந்தன. 1057 தேர்தல் முடிவுகள் பெரியார் காங்கிரசை முழுமூச்சோடு ஆதரித்தார். பொதுத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பதினைந்து இடங்களைப் பிடி lதது. மாண்புமிகு காமராசர் தலைமையில் காங்கிரசு அமைச்சரவை வl lட்டது. சி. சுப்பிரமணியம் கல்வி, நிதி அமைச்சராகத் தொடர்ந்தார். 1957-58ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு செலவுத் ■ திட்டத்திலும் பகல் உணவுத் திட்டம் இடம் பெற்றக: அகற்காக நிதி ஒதுக்கப்பட்டது. முன்னே ஒதுக்கிய நிதிபோல் ஆகும் என்று உள்ளுர அஞ்சினேன். காலமும் அலையும் நிற்பதில்லை. அரசை எதிர்பார்க்காது, ஸ்ளுர்க்காரர்களே நடத்தும் முறை மெல்லவாகிலும் பாவியபடியே இருந்தது! 'பொதுமக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர் பூரீமான் நெ. து. சுந்தர வடிவேலு என்று இரண்டொரு கூட்டங்களில் உலகறியப் பாராட்டிவிட்டார், முதலமைச்சர் காமராசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/296&oldid=788084" இலிருந்து மீள்விக்கப்பட்டது