உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நினைவு அலைகள் "தங்கள் ஊரிலேயும் அப்படிச் செய்ய வேண்டுமென்று சில ஊர்க்காரர்கள் முடிவு செய்து, சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரிவித்தார்கள். “அவர், எங்களைக் கலந்து, இன்றைய விழாக்களுக்கு ஏற்பாடு செய்தார். “இன்றைய நிகழ்ச்சிகளில் எங்கள் துரண்டுதலே இல்லை பூவோடு சேர்ந்த நாறாக மணம் வீசுகிறோம்.' இந்தத் தகவலைக் கேட்டதும்; “ஆறு திங்களாக ஒன்றும் செய்யவில்லையே என்பதற்காக, இப்போது அதிகம் முடுக்கிவிடாதீர்கள். எதிர்ப்பைக் கிளப்பி விடாதீர்கள்” என்று பொதுவாக அறிவுரை கூறினேன் 1957 தேர்தலில் பிரச்சினையாகவில்லை பகல் உணவுத் திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு அரசின் வரவு செலவுக் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தார்களே, அது என்ன ஆயிற்று? அப்படி ஏட்டில் இருந்தது: ஆணையாகக் கருக் கொள்ளவில்லை. கல்விச் செயலரை நேரில் சிலமுறை நினைவுபடுத்தினேன். புன்முறுவல் மட்டுமே அவரது பதிலாக அமைந்தது. இதற்கிடையில் ஆசிரியர்கள், பெற்றோர்களை, மற்றோரை என்னென்ன செய்யலாம் என்பது பற்றிப் பல ஐயப்பாடுகளைக் கிளப்பினேன். வெவ்வேறு வகையான கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மக்களோடு கலந்துரையாடியதன் விளைவாக, தனிக் குறிப்பு நூல் ஒன்றில், சிக்கல்கள் - ஒவ்வொன்றிக்கும் மாற்று நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தேன். 1957ஆம் ஆண்டும் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் வந்த்து சாதனைப் பட்டியல்கள் தென்பட்டன. வாக்குறுதிப் பட்டியல்கள் அவற்றினும் கவர்ச்சியாகத் தோன்றின - 'பகல் உணவுத் திட்டம் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. பேச்சாளர்கள் மணிமேகலையைத் துணைக்கு அழைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/295&oldid=788083" இலிருந்து மீள்விக்கப்பட்டது