உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவத்திட்டம் அாக ஆணை பிறந்தது 255 ஆய்வாளரும் நானும் கடமை பற்றி அவரைக் காணச் சென்றோம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார் நாங்கள் சென்ற வேளை, சட்டமன்ற மேலவை உறுப்பினர் திரு. டி. வி. சிவானந்தம் அமைச்சரோடு இருந்தார். "நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம். உட்காரச் சொன்னார். ஒரு பக்கமாக உட்கார்ந்தோம். "அமைச்சர், சிவானந்தத்தோடு பேச்சைத் தொடர்ந்தார். சுப்பிரமணியம் சொன்னது 'பகல் உணவுத்திட்டம் பரவுமா என்று நீங்கள் கேட்டீர்கள். எனக்குப் பரவுமென்று நம்பிக்கையில்லை. இங்கும் அங்கும் தடபுடலாகத் தொடங்குவார்கள். சில காலம் நடக்கும். அப்புறம் நிறுத்திவிடுவார்கள். பட்டபாடு. வீணாகப் போகும். இது ன்ன் கருத்து. "முதலமைச்சர் வேறு வகையாக நினைக்கிறார். பல வளர்களுக்குப் பரவும் என்று நினைக்கிறார். அன்தை இயக்குநரிடம் சொல்லி அதற்கான நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார். "இயக்குநர் என்ன செய்வார்? பாவம் என்னிடம் தெரிவித்தார். "முதலமைச்சர் சொன்னபடி செய்யுங்கள். செய்யாவிட்டால் தொல்லை வரும். ஆனால், வெற்றியை எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர். நம்புவதுபோலே காட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். அதிகாரி அலுவலர் தயக்கம் "இப்படிக் கல்வி அமைச்சர் ஒளிவுமறைவின்றிச் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்தோம். “அமைச்சர் சொன்னது, எங்களுக்கும் குறிப்பு என்று எடுத்துக் கொண்டோம். 'எனவே, எங்கும் பகல் உணவு தொடங்க முயலவில்லை. “உங்களைக் கண்டபோதும், அதற்கான காரியத்தை வெளிப்படுத்தவில்லை. "பல மாவட்டங்களில் ஊராரே சேர்ந்து பகல் உணவுக்கு டிற்பாடு செய்யும் செய்தியை இந்தப் பக்கத்துப் பொதுமக்களும் படி க்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/294&oldid=788082" இலிருந்து மீள்விக்கப்பட்டது