பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நினைவு அலைகள் அமைச்சர், அவ் வூர்களின் பெயர்களைக் கேட்டு அறிந்தார். 2. - == 'உறுதியான ஊர்கள். தொடங்கினதை விடமாட்டார்கள். புளியங்கிளையைப் பிடித்தது போலத்தான். இதுவர்ை எவ்வளவு ஊர்களில் பகல் உணவு நடக்கிறது” என்றார் அமைச்சர். "மூவாயிரம்” என்றேன். “பள்ளிகள் மூட கிட்டத்தட்ட இருமாதங்கள் இருக்கின்றன். அதற்குள் ஐயாயிரம் ஊர்களுக்குப் பர்ப்ப இயலுமா என்று பாருங்கள். எனக்குக்கூட இப்போது நம்பிக்கை பிறந்துள்ளது” என்றார். 30. பகல் உணவுத் திட்டம், அரசு ஆணை பிறந்தது கல்வி அமைச்சரின் கருத்து என்ன? திருப்பூர் புகைவண்டி நிலைய முதல் வகுப்புப் பயணிகள் தங்கும் அறையில், கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம், 'பகல் உணவுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்று கூறக் கேட்ட, கல்வி அலுவலர்களின் முகங்கள் வியப்பைக் காட்டின. அவர்கள், “எங்களால் ஆனதைச் செய்கிறோம்” என்று அடக்கத்தோடு நழுவினார்கள். வெளியில் போய் நின்று கொண்டிருந்தார்கள். சில மணித்துளிகளில் நானும் அலுவலர்களோடு சேர்ந்து கொண்டேன். கோவை மண்டலக் கல்வி அலுவலர், திரு. வி. டி டைட்டஸ், கோவை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. பத்மநாத முதலியாரைப் பார்த்து, “இதுவரை இயக்குநரிடம் சொல்லாமல் வைத்திருந்ததைச் சொல்லிவிடுங்கள்” என்று கட்டளை இட்டார். திரு. பத்மநாதன் அம்பலப்படுத்திய தகவல் என்ன? "கோவில்பட்டிப் பகுதியில், முதலமைச்சர், பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கிய காலம். அப்போது கல்வி அமைச்சர், அலுவல் பற்றிக் கோவைக்கு வந்திருந்தார். மண்டலக் கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/293&oldid=788081" இலிருந்து மீள்விக்கப்பட்டது