பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவு அலைகள் முதலமைச்சர் காமராசர் முதல், கல்வித் துறையின் கடைசித் தொண்டர்வரை, தெரிந்தே செய்தார்கள். சொல்லியே செய்தார்கள். “கிண்டியில் உள்ள துளசி நீரை நாலு சொட்டு ஊற்றுவது போல், இதுவரை கல்வி என்பது, ஏற்கெனவே தெரிந்தவற்றில் சில துளிகளை வழங்கி வந்தது. 'மன மாற்றத்தையும் நல்ல பழக்கங்களையும் ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவை வெல்லட்டும், உடம்பு நோகாமல் உள்ளம் துடிக்காமல், எல்லோரும் ஒர் குலம்’ என்னும் புதிய சமுதாயம் உருவாகட்டும்.” இப்படி வாழ்த்தினார் சாதி முறையில் உயர்ந்த மூத்த வைணவர் ஒருவர். நெய்யாடிவாக்கம் பள்ளியில் ஏற்பட்ட சமத்துவம் எவ்வளவு இயற்கையாக, பசுமை கட்டிற்று என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உயர்நிலைப் பள்ளி விழா சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஊரில் உயர்நிலைப் பள்ளி யொன்று தோன்றிற்று. அது வளர்ந்து நிறைவும் பெற்றது. இதற்கிடையில், நான் தில்லியில், இந்தியக் கல்வி அமைச்சகத்தில் இணைக் கல்வி அறிவுரையாளனாகச் சென்று, ஈராண்டு காலம் இருந்துவிட்டு, முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் ஆணைக்கு அடங்கி, சென்னைக்குத் திரும்பினேன். அண்ணா, என்னைத் தலைமைக் கல்வி ஆலோசகராகவும் கூடுதல் செயலராகவும் நியமித்தார். அப் பொறுப்பில் இருக்கும்போது, எங்களுர் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவிற்கு அழைத்தார்கள். விழாவன்று முற்பகலே சென்றேன். எங்கள் வீட்டுத் திண்ணைமேல் உட்கார்ந்திருந்தேன். எனக்குத் தம்பி முறையுடைய ஒருவரின் மகன் - மாணாக்கன் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒருவர் மிதிவண்டிமேல் தெருவழியே சென்றார். என்னுடன் உட்கார்ந்திருந்த இளைஞன், திண்ணை மேலிருந்து குதித்து வழியே போனவரை வணங்கினான். அவர் வணக்கம் சொன்னபடியே, வழியே சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/307&oldid=788096" இலிருந்து மீள்விக்கப்பட்டது