பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமத்துவச் சங்கின் முழக்கம் கேட்டேன் 259 மிதிவண்டி சற்றுத் தொலைவு போன பிறகு, “அவர் யார்?” என்று பையனைக் கேட்டேன். "அவர், எனது வகுப்பு ஆசிரியர்.” “எந்த ஊர்க்காரர்?” "நம்ம ஊரே, பெரியப்பா அப்பப்ப வந்து கொண்டிருந்தால், அடுத்த தலைமுறையை அடையாளம் தெரியும்” என்று துடுக்கோடு, வெளிச்சம் காட்டினான். மாலை விழா ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்தது. வகுப்பு முறைப்படி மானக்கர் அமர்ந்து இருந்தார்கள். இடை இடையே சில ஆசிரியர்கள் நின்றபடியே கூட்ட ஒழுங்கைக் கவனித்து வந்தார்கள் அவர்களில் நான் மிதிவண்டியில் கண்டவரும் ஒருவர். நிகழ்ச்சிகள் முறைப்படி ஒழுங்காகவும் விரைவாகவும் ஓடின. பரிசு அளிப்புக் கட்டம் வந்தது. பரிசுக்குரியோர் வந்து பெற்றுக்கொண்டு சென்றனர். பரிசும் கையுமாகச் சென்ற மாணாக்கரை, ஆசிரியர்கள் முதுகில் தட்டிக் கொடுக்கக் கண்டேன். ஒருவன் இரண்டு மூன்று பரிசுகளைப் பெற்றான்; அத்தனை முறை ஆசிரியர் அவனைத் தட்டிப் பாராட்டினார். அப்படித் தட்டும் வேளை, "அண்ணா! அந்தப் பையன் என் மகன்” என்பது என் காதில் வீழ்ந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்குத் தம்பி முறை உள்ள பங்காளியைக் கண்டேன். காலம் மாற்றிவிட்டது நிழற்படம் போல் மனக் காட்சிகள் என்னுள் விரிந்தன நான் சிறுவனாக இருந்தபோது, எந்தத் தெருவழியாக ஆதிதிராவிடர் நடந்து செல்ல முடியாதோ, அந்தத் தெரு வழியே, அப் பிரிவைச் சேர்ந்தவர் மிதிவண்டியில் போகும்நிலை வந்து விட்டது. எத்துணை பூரிப்பு! எந்தச் சாதிச் சிறுவனைக் கண்டால், தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு போகவேண்டுமோ அந்தச் சாதிச் சிறுவன், பழங்குடியினருக்கு எழுந்து வணக்கம் தெரிவிக்கும் அளவு, அமைதிப் புரட்சி நடந்துவிட்டது. எத்தனை மகிழ்ச்சி! இரண்டிற்கும் மணிமுடியாக, சாதி இந்துச் சிறுவனைப் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர், சிறுவனின் தந்தை உள்பட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/308&oldid=788097" இலிருந்து மீள்விக்கப்பட்டது