பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 33. பிறவிப் பொலிவு பெற்ற திருவள்ளுவன் காந்தம்மா சுந்தரவடிவேலு, வள்ளுவன் இருவரைப்பற்றிச் சில செய்திகளை இந்தச் சமயத்தில் சொல்லியாக வேண்டும். சிறுவன் வள்ளுவன் பிறவிப்பொலிவு பெற்றவன். எனவே, அவனது குழந்தைப் பருவம் குடும்பத்தினருக்கு மகிழ்வூட்டியது போன்றே, காண்போர் அனைவரையும் கவர்ந்தது. 1952ஆம் ஆண்டு சூன் திங்கள், வள்ளுவனுக்கு இரண்டரை அகவை. துருதுருவென்று இருக்கும் குழந்தைக்கு வீட்டில் குழந்தைத் தோழமை இல்லை. அவன் வயதுப் பிள்ளைகளோடு சேர்ந்து வளர்ந்தால், பண்பாட்டோடும் அகந்தை புகாதும் வளர்வானென்று எண்ணினோம். தமிழ் மொழி வாயிலாக, நர்சரிப் பள்ளி தொடங்கும்படி தகுதியுள்ள சிலரிடம் சொல்லிப் பார்த்தோம். எவரும் முன்வரவில்லை. 'பாலர் கல்வி முறை ஆங்கிலத்தின் வழியாகவே போதிக்க முடியும் என்பது குருட்டு நம்பிக்கை பாலர் கல்விமுறை எல்லா மொழியினரிடமும் உள்ளது. அவரவர் மொழியிலேதான் நடக்கிறது. தமிழ் மக்களிடம் மட்டும் வேறு மொழியில் இருப்பானேன்? தமிழ் மொழி வாயிலாக நர்சரிக் கல்விக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 'திருவள்ளுவன் வாழைப் குருத்தென வளரும் பருவத்தில், வீட்டில், தனியே முடங்கிக்கிடப்பதா?’ என்ற புதிரான கேள்வி எழுந்தது. பதில் காணும் பொறுப்பை, காந்தம்மா ஏற்றுக்கொண்டார். வள்ளுவனை அழைத்துக்கொண்டு சென்னை அண்ணா சாலையில், ஆயிரம் விளக்கு அருகில், (சர்ச் பார்க்) தேவாலயப் பூங்காவில் செயல்படும் பிரசென்டேசன் கான்வெண்டிற்குச் சென்றார். அப் பள்ளி அக் காலத்தில் கல்வித்துறையின் கண்காணிப்பில் வரவில்லை. பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் செயல்பட்டது. அந்த மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை தவத்திரு செலின் அம்மையாாைக் கண் ஈர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/328&oldid=788119" இலிருந்து மீள்விக்கப்பட்டது