உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 B நினைவு அலைகள் அவர், அப்படிச் சொல்லும் வேளை, நான் பந்தலில்தான் இருந்தேன். இருந்தும் எவரும் எனக்குத் தகவல் கொடுக்கவில்லை. திரு. இராஜம் கூடவா? ஆம் ஏன்? அவர் யாரிடமும் வினோபா அழைப்பைப்பற்றிக் கூறாமல், “அடுத்த தோட்டத்திற்குப் போய் வருவோம். வாருங்கள் ஒரு நிமிடம்” என்று சொல்லி அழைத்துப் போய்விட்டார். ஆதாரக் கல்வியின் தலைமைப் பூசாரித் தொண்டர்கள் எங்கே, எதற்காகப் போகிறோம் என்று தெரியாமல் பிரமுகர் பின்னால் சென்றார்கள். வினோபாவின் முன்னே நிற்பதை உணர்ந்தார்கள். அடுத்த நொடி, வினோபா, “மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. அவற்றுக்காக என் நன்றி. அதே ஆர்வத்தோடு, ஆதாரக் கல்வியை யும் நாட்டில் நடைமுறைப் படுத்த முனையுங்கள்” என்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர், அடுத்த தோட்டத்தில் தங்கியிருந்த வினோபாவின் நன்றியைக் கேள்விப்பட்டு ஒருபால் மகிழ்ந்தேன்; அதே நேரத்தில் அவர் அழைத்தது பற்றித் தகவலும் கொடாத பொல்லாத போக்கை எண்ணி மிகவும் வேதனைப்பட்டேன். இந்த இருட்டடிப்பு வேலை செய்த பெரியவரைத் தேடிச் சென்றேன். நண்பர்களுக்கு விடை கொடுத்துக் கொண்டு இருந்தார். "நான், அறிமுகத்திற்குத் தகுதியற்றவனாக இருக்கலாம்; வினோபாவை வணங்குவதற்காவது கடமைப்பட்டவன் அல்லவா? வினோபா அனைவரையும் அழைத்ததை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கேட்டேன். “சொல்லாதது தவறுதான்” என்பதோடு நின்றுவிட்டார். “என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் வாக்குப் பளிச்சிட்டது. 'நீ யார்? மக்கள் பெருங்கடலின் சிறுதுளி என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/327&oldid=788118" இலிருந்து மீள்விக்கப்பட்டது